'மனுதர்மமும் பெண்ணுரிமையும்' சிறப்புக் கருத்தரங்கம்


நாகர்கோவில், நவ. 27-- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார் பில் "மனுதர்மமும் பெண்ணு ரிமையும்" என்ற தலைப்பில் மாதாந்திர  சிறப்புக் கருத்தரங் கம்( 21 ஆவது) நடைபெற்றது


பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு தலைமை தாங்கி உரை யாற்றினார். மாவட்ட கழக அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ், மாவட்ட கழக துணைச் செயலாளர் சோ.பன்னீர்செல் வம் முன்னிலை வகித்தனர் திக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார்.  திருக்குறள் பரப்புரையாளர் தார்சியுஸ்  ராஜேந்திரன், செல் வின் சதீஷ் குமார்  ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க் முகமது கடவுள் மறுப்பு கூறினார், கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அலெக் சாண்டர் அமைப்பாளர் மு. சேகர், குருந்தன் கோடு ஒன்றிய கழக அமைப்பாளர் செல்லையன், கிளை கழக செயலாளர் பி.கென்னடி, கழகத் தோழர்கள் சி.அய்சக் நியூட்டன் சி.காப்பித்துரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் தாமோ தரன், விசிக தோழர் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.  புதிய இளைஞர்கள் லிபின் ராஜ், வெங்கடேஷ் இயக்கத்தில் இணைந்தனர்,  காத்த பெருமாள், ராஜ் மற் றும் பலர் பங்கேற்றனர்.  மனு தர்மம் மக்களை எவ்வளவு இழிவுபடுத்துகிறது என்பது  குறித்து கருத்தரங்கில் தோழர் கள் பலரும் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.


Comments