கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான மனநல ஆலோசனை மய்யம் தொடக்கம்

சென்னை,நவ.5, கிண்டி கிங் மருத் துவமனையில் முதன்முறையாக, மனநல ஆலோசனை மய்யம் துவங்கப்பட் டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனை யின் இயக்குநர் கே.நாராயணசாமி கூறியதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று குடும்பத் தினரிடம் இருந்து தனிமைப் படுத்தப்படுகின்றனர். தனிமை, சிகிச்சை, தொற்றால் ஏற்பட்ட அச்சம் போன்றவற் றால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படு கிறது. அதிகமாக கவலைப்படுகின்றனர். தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சைகளுடன் மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. அத னால், முதன்முறையாக அரசு கரோனா மருத்துவமனையில் மனநல ஆலோ சனை மய்யம் துவங்கப்பட்டுள்ளது என  அவர் கூறினார்.


அரைவேக்காடுகளுக்கு சமர்ப்பணம்


மத்திய அரசின் இணையத்தில் மனு ஸ்மிரிதி வெளியீடு


புதுடில்லி,நவ.5, மத்திய அரசின் இந்தி யக் கலாச்சாரத் துறை இணையத்தில் மனு ஸ்மிரிதி வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்தியக் கலாச்சாரத் துறையின் இணையத்தில் 1909-வெளியிடப்பட்ட மனு சம்கிதா (Manu Samhita), 1896-இல் முதல் பதிப்பும், பின்னர் 1964-இல் இரண்டாவது பதிப்பாக மனு சட்டம் (Laws of Manu),   ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மனு சட்டத் திற்கு அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் ஜூலை 10, 1962-இல் வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்.


இது மட்டுமல்ல. மனு ஸ்மிரிதி என்ற நூலும் பல பதிப்புகள் இடம் பெற் றுள்ளது.


1. மனு சட்டம்(Laws of Manu) <https://www.indianculture.gov.in/laws-manu-0>


2. மனு சம்கிதா  (Manu Samhita) <https://www.indianculture.gov.in/manu-samhita>


3. மனுஸ்மிரிதி - <https://www.indianculture.gov.in/manu-smrti-laws-manu-bhasya-medhatithi-2>


மனு சமஸ்கிருதத்தில்தானே உள் ளது. இவர்களுக்கு எல்லாம் சமஸ்கிருதம் தெரியுமா? என்று பதிவிடும் சில அரை வேக்காடுகளுக்கு இது சமர்ப்பணம்.


Comments