ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணமாம் புரோகிதர் தாலி கட்டினாராம்! 

இப்படியும் ஒரு மூடத்தனம்


பீதர் (கருநாடகா) நவ.16 மூடநம்பிக்கையை முதலீடாக வைத்து, மக்களை சுரண்டி பிழைப்பு நடத்துவதில் பார்ப் பனர்கள் எந்த காலத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆட்டுக் குட்டிகளுக்கு மந்திரங்கள் சொல்லி திருமணத்தை நடத்தியுள்ளனர் கருநாடக மாநில பார்ப்பனப் புரோகிதர்கள்.  அதன் விவரம் வரு மாறு:


புரோகிதர்கள் ஆண் குட் டியின் வலது காலையும், பெண் குட்டியின் இடது காலையும் இணைத்து நூலால் கட்டினர். பின்னர் வேத மந்திரங்கள் ஓதிய பின், நாதசுர இசையில் புரோகிதர் தாலி கட்டினார்.


மழை வேண்டி கழுதை, தவளை, ஓநாய் உள்ளிட்டவை களுக்கு திருமணம் செய்துவந்த மூடநம்பிக்கை தற்பொழுது தீபா வளிக்காக என்று கூறி ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடந்துள்ளது.


கருநாடக மாநிலம், பீதர் தாலுகாவில் உள்ள ஹவுராத் கிராமத்தில் கடந்த 600 ஆண்டு களுக்கு முன் தீபாவளி  நாளில் ஆண், பெண் ஆட்டுக் குட்டி களுக்கு திருமணம் செய்து வைக் கும் வைபவம் தொடங்கப்பட்டது. கடந்த 14ஆம் நூற்றாண்டில் மகாத்மா பொம்மகொண் டேஷ் வரசாமி தீபாவளி நாளில் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை தொடங் கியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


600 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வழக்கத்தை கிராம மக்கள் இன்று வரை தொடர்ந்து செயல்படுத்தி வரு கிறார்களாம். அதன்படி இவ் வாண்டு தீபாவளி நாளான ஹவுராத் கிராமத்தில் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் நடந்தது. அக்கிராமத்தை சேர்ந்த சிறுவர் முதல் முதியோர் வரை காலையில் எண்ணை வைத்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கிராமத்தில் உள்ள தேவதை கோயில் திடலில் கூடினர். முதலில் கிராம தேவதைக்கு   அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளை குளிப் பாட்டி புத்தாடை அணிந்து, மாலைகள் சூடி நெற்றியில் குங்குமம், திரு நீரிட்டு அழைத்து வந்தனர்.


புரோகிதர்கள் ஆண் குட்டியின் வலது காலையும், பெண் குட்டியின் இடது காலையும் இணைத்து நூலால் கட்டினர். பின்னர் வேத-மந்தி ரங்கள் ஓதிய பின் நாதஸ்வர ஓசையில் புரோகிதர் தாலி கட் டினார். இத்திருமணத்தில் அனை வரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தர விட்டதால் கிராமமே கோயில் வளாகத்தில் கூடியது!


Comments