நரியை நனையாமல் குளிப்பாட்டும் 'தினமலர்!'

'தினமலர்' (2.11.2020)   தீட்டிய தலையங்கத்தைப் படித் துப் பார்க்கும் எவருக்கும் பார்ப்பனர்களின் தளுக்கும், தந்திரமும், நரியை நனையாமல் குளிப்பாட்டும் புத்தியும் எத்தகையது என்பதை ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் எளிதாகவே புரிந்து கொள்ள முடியும்.


1) தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக் காடு இடஒதுக்கீடுக்கான தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்யவில்லையாம், என்ன காரணமாம்? ஆளுநர் உடனேயே அனுமதி அளித்து இருந்தால், தமிழ்நாடு அரசைப் பின்பற்றி மற்ற மற்ற மாநிலங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடங்களைக் கோருவார்களாம்.


மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு அரசைப் பின்பற்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு7.5 விடுக்காடு இடங்கள் கோரினால் என்ன தவறு? தமிழ்நாட்டைப் போல அரசுப் பள்ளி மாணவர்கள் மற்ற மற்ற மாநிலங்களிலும் பாதிக்கப் படத்தானே செய்வார்கள்? அத்தகைய மாணவர்களுக்கு மற்ற மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு அரசைப் பின்பற்றினால், சமூகநீதி காப்பாற்றப்பட்டதாகத் தானே பொருள். இந்த வகையில் தமிழ்நாடு வழி காட்டியிருக்கிறது என்ற பெரு மையும் நமக்குக் கிடைத்திருக்குமே.


தமிழ்நாட்டோடு இது முடிந்து தொலையட்டும்; மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் மருத்துவக் கல்விக்கான இடங்களை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம் விடலாம் என்கிற சுயஜாதி லாப வெறிதானே இதற்குள் அடங்கி இருக்கிறது.


ஓர் இடத்தில் இந்த சட்டம், ஆளுநர் ஒப்புதல், பால் வார்த்து விட்டது என்று ஏதோ சமூகநீதியில் அக்கறை கொண்டதுபோல நடிக்கும் 'தினமலர்' - அதே ‘நெஞ்சில் பால் வார்ப்பு' மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்தால் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்.


ஆளுநர் செய்த தாமதம் - அவருக்குப் பின்னால் இருக்கும் மத்திய பிஜேபி அரசின் சமூக அநீதித் தன் மையும் அம்பலத்திற்கு வந்தால், அது 'தினமலர்களுக்கு' மகிழ்ச் சியை அளிக்குமா?


ஆளுநரின் தாமதமான நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்திட இன்னொரு காரணத்தையும் கற்பிக்கிறது 'தின மலர்' தலையங்கம். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கருத்தைப் பெற்ற மறுநாளே ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டாராம் - 'சபாஷ்' போடுகிறது 'தினமலர்!'


சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற சிந்தனை தமிழ்நாடு அரசு - புது ஆணை ஒன்றைப் பிறப்பித்ததற்குப் பிறகுதான் பிறக்க வேண்டுமா? இந்த சிந்தனை ஆளுநருக்கு வருவதற்கு 45 நாள்கள் தேவைப் படுமா?


ஆளுநர் அனுமதி அளிக்கக் கால தாமதம் செய்ததால், தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக் கட்சிகளும் போராட் டங்களை நடத்தியதெல்லாம் மத்திய பிஜேபி அரசுக்குத் தெரியவே தெரியாதா?


ஆளுநர் தாமதத்தின் பின்புலத்தில் மத்திய பிஜேபி அரசு இல்லவே இல்லையா? பொருளாதாரத்தில் நலி வடைந்த உயர்ஜாதி யினருக்கு  10 சதவீத மத்திய அரசின் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டிருந்தால் இந்தத் தாமதம் ஏற்பட்டு இருக்குமா?


இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, எவ்வளவுத் தந்திர மாக 'தினமலர்' தலையங்கம் தீட்டுகிறது - பார்ப்பன பம் மாத்து எத்தகையது என்பது இன்னுமா விளங்கவில்லை?


ஆளுநர் அனுமதி கொடுத்த சட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் 300 பேர்களுக்கு இடம் கிடைக்கும் என்று 'தினமலர்' எழுதியிருப்பது சரியான புள்ளி விவரமே.


(2) ஆனால் தமிழ்நாடு அரசு மத்திய தொகுப்புக்கு அளித்த மருத்துவக் கல்விக்கான இடங்களில் 50 விழுக் காடு தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய இடங்களை அளிக்க மறுப்பதால், 764 இடங்களைப் பிற்படுத்தப்பட் டோர் இழந்து விட்டனரே - இது குறித்து எழுதிட 'தின மலர்' எழுதுகோலுக்கு மை தீர்ந்துவிட்டதா?


தமிழ்நாட்டில் இழப்பு 764 என்றால் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர் இழக்கும் 3,758 இடங்களும் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்படப் போகின்றது?


'தினமலர்' திரிநூல் கூட்டத்துக்குத் தானே!


பெரும்பாலான மக்கள் மத்தியில் போதிய விழிப்பு ணர்வு இல்லாத காரணத்தால், அவர்களுக்கான இடங் களை வழிபறித்துத் திருடி அஜீரணம் ஏற்படும் அளவுக்கு விழுங்கி ஏப்பம் விடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர் கண் விழித்தால் அப் பொழுது தெரியும் சேதி?


Comments