ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை பாஜகவிற்கு என்ன பலனைத் தரப் போகிறது? வேலை எடுத்துக் கொண்டு செல்வதால் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? அதிமுக - பாஜக இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையால் மக்களுக்கு என்ன பயன்? என்ற கேள்வி களை தலையங்கம் முன்வைக்கிறது.

  • மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்த ஆண்டு கொள்முதல் செய்த பொருட்களும் சேவைகளும் சென்ற ஆண்டைவிட 62 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு ரூ.1,24,021 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.47,044 கோடிக்குத்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை அரசின் எம்.எஸ்.எம்.இ. இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • தேசிய சிறுபான்மை ஆணையத்தில் தற்போது ஒருவர் மட்டுமே உறுப்பினராக உள்ளார். தலைவர் உள்ளிட்ட மீதம் ஆறு பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. இதே போன்று, தேசிய எஸ்.சி. ஆணையப் பதவிகளும் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது.

  • சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் கேரள அரசின் அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. காவல்துறைக்கு புதிய ஆயுதத்தை அளிக்க வல்லது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


தி டெலிகிராப்:  • பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, வேளாண் சட்டங்கள், இவை அனைத்தும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. விவசாயிகள், கார்ப்பரேட் கருணையில் வாழ வேண்டிய நிலையும், உணவு பாதுகாப்புக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என பொருளாதாரப் பேராசியரும், ஜவகர்லால் பல்கலைக்கழக கவுரவப் பேராசிரியருமான பிரபாத் பட்நாயக் கருத்திட்டுள்ளார்.


குடந்தை கருணா


23.11.2020


Comments