எதிர்கட்சிகள் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா

எதிர்கட்சிகள் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா?


அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை!


சென்னை, நவ. 12- அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதா கவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட அனு மதியும் ரத்து செய்யப்படுவதாக   தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு ரத்து  செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள் ளார்.  ‘டிசம்பர் 2ஆம் தேதி முதல் முது நிலை இறுதியாண்டு அறிவியல் & தொழில்நுட்ப மாணவர்களுக்கு வகுப்பு கள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, மேலும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, அரசியல், மதம் சார்ந்த கூட்டங் களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும்,  ஏற்கெனவே வழங் கப்பட்ட 100 நபர்களுக்கு மிகாமல் அரசியல், மதம் சார்ந்த கூட் டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுவதாகவும் அதிரடியாக அறிவித்துஉள்ளது.


அதுமட்டுமின்றி  சமுதாய, பொழுது போக்கு, கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்ச்சி களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுவ தாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தி.மு.க. மாநிலத்தின் பல்வேறு மாவட் டங்களில் மக்களைச் சந்தித்து தேர்தல் பரப் புரையைத் துவங்கி உள் ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பரப்புரை பேச் சுக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது,  இதனை மனதில் கொண்டே அரசியல் நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப் பித்திருக்கிறார் என்று அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதே வேளையில் அரசு விழா என்ற பெயரில் முதல்வர் முதல் அனைத்து அமைச்சர் களும் தங்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Comments