ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • மத்திய பிரதேச மாநிலத்தில் தாப்ரா சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவிய ஜோதி ராதித்யா சிந்தியா, பாஜக வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக காங்கிரசுக்கு வாக்களி யுங்கள் என்று கூறியது அம் மாநிலத்தில் இடைத் தேர்தல் நடக்கும் பல பகுதிகளிலும் வீடியோ வைரலாகி வருகிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

  • குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சட்ட மன்ற உறுப்பினர் சோமபாய் படேல் தனக்கும் தன்னைப் போல காங்கிரசில் இருந்து விலகிய உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பாஜக ரூ.10 கோடி பணம் கொடுத்தது என்று கூறியுள்ளார்.


தி டெலிகிராப்:  • மோடிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு பற்றி பீகார் மாநிலத் தேர்தல் தெரியப்படுத்தும். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி 23 சதவீதமாக உள்ளது; வேலைவாய்ப்பின்மை அதி கரித்துள்ளது. இவை அனைத்தும் மோடியின் திறமையின் மையை வெளிப்படுத்துவதாக சஞ்சய் ஜா தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

  • 2019 நாடாளுமன்ற தேர்தலில் 381 சட்ட மன்ற தொகுதி உள்ளடக்கிய தொகுதிகளில் மோடி அரசு வெற்றி பெற்றது. ஆனால் இந்த தொகுதிகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 163 சட்டமன்ற தொகுதிகளில் தான் பாஜக வெற்றி பெற முடிந்தது. பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நினைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.


ஹிந்துஸ்தான் டைம்ஸ்:  • நாட்டின் வளங்கள் ஒரு சில தனியார்க்கு மட்டுமே சென் றடைகின்றன. சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு சென்றடையும் வகையில் பொருளாதார வளர்ச்சிக்கான வடிவமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளார்.


குடந்தை கருணா


2.11.2020


Comments