ஜெனீவா,நவ.16 பன்னாட்டளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.43 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 5கோடியே 43லட்சத்து 18ஆயிரத்து 841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3கோடியே 78லட்சத்து 66ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 18 ஆயிரத்து 44 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 51 லட்சத்து 33ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98 ஆயிரத்து 127 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 1,12,26,038, உயிரிழப்பு - 2,51,256, குண மடைந்தோர் - 6,891,015
இந்தியா - பாதிப்பு - 8,814,902, உயிரிழப்பு - 129,674, குணமடைந்தோர் - 8,203,737
பிரேசில் - பாதிப்பு - 5,848,959, உயிரிழப்பு - 165,673 , குணமடைந்தோர் -5,291,511
பிரான்ஸ் - பாதிப்பு - 1,954,599, உயிரிழப்பு - 44,246 , குணமடைந்தோர் - 139,140
ரஷியா - பாதிப்பு - 1,903,253, உயிரிழப்பு - 32,834, குணமடைந்தோர் - 1,425,529
கொலம்பியா - பாதிப்பு - 1,191,004, உயிரிழப்பு - 33,829, குணமடைந்தோர் - 745,361