துணைவேந்தர் சூரப்பா மீது அடுக்கடுக்காக குவியும் புகார்: நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை, நவ. 22- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது அடுக்கடுக் காக புகார்கள் குவிந்து வருவதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு சர்ச்சை களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை விசாரிப்பதற்கான விசா ரணை குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த 11ஆம் தேதி அமைத்தது. மேலும் மூன்று மாதங் களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி கலையரசன் துணை வேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் தரலாம். புகார் தருபவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.


இதையடுத்து,  20.11.2020 அன்று சூரப்பா மீது 280 கோடி ரூபாய் மோசடி புகார் ஒன்று கூறப்பட்டுள்ளது. நிதி அலுவலர்கள், கணக்கு தணிக்கையாளர் கள் உதவியுடன் விசாரணை மேற்கொள் ளப்படும். அவருடன் இணைந்து முறை கேடுகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப் பட்டவர்களும் விசாரணைக்கு அழைக் கப்படுவார்கள். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என தெரிவித் தார். மேலும், சூரப்பா மீது குற்றம்சாட்டி புகார் கொடுத்தவர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறினார்.


இதை தொடர்ந்து துணைவேந்தர் சூரப்பா மீது தொலைபேசி மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் ஏராளமான புகார்கள் வந்தபடி இருந்தன. பல்கலைக் கழக ஊழியர்களும் புகார் தெரிவித்த னர். இதையடுத்து, சூரப்பா மீது புகார் கூறுபவர்கள் நேரில் வந்து எழுத்துப்பூர் வமாக புகார் கொடுக்க வேண்டும். எழுத் துப்பூர்வ புகார்கள் கிடைத்தப்பிறகு விசாரணை தொடங்கும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.


Comments