வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!

மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதை எடுத்துச் சொன்னதற்காகத் தாண்டிக் குதிக்கும் சோ, குருமூர்த்தி வகையறாக்களுக்கு... மனுவும், கீதையும் மகளிரை, இழிவுபடுத்தி எழுதியது ஒருபுறம் இருக்கட்டும்.


பெண்களைப்பற்றி ‘சோ'வின் மதிப்பீடு என்ன?


கேள்வி: பெண்களைப்பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம் என்ன?


சோவின் பதில்: உயர்ந்தவர்கள் - அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (‘துக்ளக்', 18.3.2009).


இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவையா?


பெண்கள் என்றால் சோவின் கருத்து- ‘‘பெண்கள் உயர்ந்தவர்களாக இருக்க விரும்பாதவர்களாம்!'' மனுதர்ம நாற்றத்தில் புழுத்த புழுதானே இது!


சரி, சோவையும், ஒரு மூலையில் விட்டுத் தள்ளுவோம்!


இன்றைய ‘துக்ளக்' குருமூர்த்தியின் பெண்களைப்பற்றிய கருத்து என்ன?


‘‘ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்துக்கு வந்த குருமூர்த்தி, தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகிதப் பெண்களே பெண்மையுடன் இருக்கிறார்கள். அவ்வாறு பெண்மையுடைய பெண்களை மட்டுமே தெய்வமாகக் கருதுகிறேன்!''


இதன் பொருள் என்ன?


70 சதவிகிதப் பெண்கள் - இவர்கள் கண்ணோட்டத்தில் பெண்மையற்றவர்களே!


சென்னையில் தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் (25.8.2019) பேசுகையில் குருமூர்த்தி அய்யர்  குறிப்பிட்டது இது.


இந்த யோக்கியதையில் உள்ளவர்கள் மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கத்தானே செய்வார்கள்!


Comments