ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது தொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சி புகார் தெரிவித்ததையடுத்து, பீகார் மா நிலத்தில் நிதிஷ்குமார் அமைச்சரவையின் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  • மத்திய பாஜக அரசின் தனியார்மயமாக்கக் கொள்கைக்கு டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஹைதராபாத் நகரில் மட்டுமே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் உள்ளன. இந்த நிறுவனங்கள் மற்றும் எல்.அய்.சி., பி.எஸ்.என்.எல். நிறுவன தொழிலாளர் அமைப்புகள் தங்கள் ஆதரவை முதல்வர் சந்திரசேகரராவிற்கு அளித்திட முன் வந்துள்ளன.

  • அனைத்து மாநில பிராந்தியக் கட்சிகளையும் ஒருங் கிணைத்து, மத்திய பாஜக அரசை எதிர்க்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். தற்போது நடைபெற உள்ள அய்தராபாத் நகர தேர்தலில் அவரது கட்சி பெறும் வெற்றியைப் பொருத்து அவரது முயற்சி வெல்லுமா? என்பது தெரியும் என சிறீராம் காரி தனது கட்டு ரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை குறித்து, தலைவர்களின் கருத்துக்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • தான் எழுதிய கடிதத்திற்கு, மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் அளித்த பதில் இந்தியில் உள்ளதை திரும்பப் பெற்று, ஆங்கிலத்தில் பதில் அளிக்கும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் அமைச்சருக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் நேரு அளித்த உறுதிமொழியின்படியும், அலுவல் மொழி சட்டம், 1976-ன்படியும், மத்திய பணியாளர் துறையின் அரசாணை 1.12.2018-ன்படியும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் கடிதப் போக்குவரத்து ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும் என்பதையும் தனது கடிதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார்.


தி இந்து:  • எந்தவித அடிக்கட்டுமானமும் இல்லாமல் பல மாவட்ட தலை நகரங்களை மாநகராட்சி என தமிழ் நாடு அரசு என அறிவிப்பதையும், அந்த மாநகராட்சிக்கு உரிய திட்டக் குழுவை யும் நியமிக்காமல் இருப்பதற்கும், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


அவுட்லுக்.காம்:  • மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு, சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட முடியாது. அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு அனைத்து உரிமையையும் அளித்து உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அண்மையில் எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் மிசோரம் ஆகிய மா நிலங்கள் தங்கள் ஒப்புதல் இல்லாமல் சிபிஅய் விசாரணை செய்ய முடியாது என அறிவித்தன.


குடந்தை கருணா


20.11.2020


Comments