இப்படியும் ஒரு மூடத்தனம்: ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி நேர்த்திக் கடனாம்!


ஈரோடு, நவ. 18- ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்துள்ள கும்டா புரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3ஆவது நாள் சாணியடி திருவிழா என்கிற மூடத்தனம் வழக்கத்தின் பெயரால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இதுகுறித்த விவரம் வரு மாறு, நேற்று (நவ.17) காலை சாணியடி திருவிழாவுக்காக அக்கிராமத்தில் உள்ள பசு மாட்டு சாணம் சேகரிக்கப் பட்டு கோவிலின் பின்புறம் குவிக் கப்பட்டது. ஊர் குளத் தில் இருந்து கழுதை மேல் கடவுளர் சிலையை வைத்து ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டது. இதையடுத்து பீரேஸ்வரர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் னர் கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணத் துக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாணத்தை உருண்டையாக பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.


இந்த திருவிழாவில் ஆண்டு தோறும் தமிழக பக்தர் களுடன் இணைந்து கரு நாடக பக்தர்களும் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக தமி ழக பக்தர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட் டிருந் தது. கருநாடக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


Comments