வேலைக்குச் சென்றதால் தாலிபான்களால் பார்வை பறிக்கப்பட்ட ஆப்கான் பெண் காவல்துறை அதிகாரி


ஆப்கானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பழமை வாதிகளான தாலிபான்களைச் சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக பழமைவாதி களாகவே வைத்திருப்பதை விரும்புகின்றனர். இதில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பும் ஒருவர் ஆவார்.


ஆப்கானில் விரல்விட்டு எண்ணக்கூடிய பெண்கள் மட்டுமே வேலைக்குச் செல்கின்றனர். அதிலும் காவல் துறை ராணுவம் போன்ற துறைகளில் பெண்கள் சேருவது மிகவும் குறைவே ஆகும்.


 அப்படித்தான் சேர்ந்த கட்ரா என்ற பெண் காபூலைச் பள்ளிப்படிப்பின் போதே காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவைச் சுமந்தார். பள்ளிக் காலத்தில் இருந்தே கட்சாவின் நடவடிக்கையை அவரது தந்தை எதிர்த்து வருகிறார். இவரும் பள்ளிப் படிப்பை மட்டும் படித்து விடுகிறேன் என்றார். பிறகு கல்லூரி  மட்டும் படிக்கிறேன் என்று கூறியவர் தனது தந்தையைக் குறை வாக எடைபோட்டு விட்டார். ஆகையால் தான் ஆப்கான் காவல்துறையில் அதிகாரிகளுக்கான பயிற்சியில் சேர்ந்து உயரதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.


ஆப்கானின் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் அதிகாரிகளுள் இவரும் ஒருவர். திறமையும் தன்னுடைய நாட்டிற்காகச் சேவைசெய்யவேண்டும் என்ற கனவும் இவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது. தான் காவல்துறை அதிகாரியானது குறித்து ஆப்கானில் பலர் என்னைப் பாராட்டினார்கள். நானும் எனது கனவுகளுக்குச் சிறகு கிடைத்துவிட்டது என்று 3 மாதங்களாக பணியாற்றிக்கொண்டு இருந்தேன்.


கட்ரா தனது பணியை மிகவும் காதலித்தார். ஆனால் இந்தக் காதல் அவரது தந்தைக்குப் பிடிக்கவில்லை. ஆப் கானில் பெண்கள் ஆண்கள் துணையின்றி நடமாடுவதே தவறு. படிப்பது அதைவிடத் தவறு, வேலைக்குச் செல்வது மரண தண்டனைக்கு ஒப்பான தவறு ஆகும் என்று நினைக்கும் தாலிபான்களின் சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்.


சில நாட்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து திரும்பிக் கொண்டு இருந்தார். மூன்று பேர் அவரை நெருங்கி வந்தனர். அவர் ஏதோ ஆபத்து என்று உணர் வதற்குள், துப்பாக்கியால் அவரை நோக்கிச் சுட்டனர்.  கைகளில் குண்டுபாய்ந்து கீழே விழுந்தவரின் இரண்டு  கண்களிலும் கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டனர். அவர் கடைசியாகப் பார்த்த காட்சி அந்த நபர்கள் மட்டுமே. இருளானது இவரது கண்கள் மட்டுமல்ல இவரது வண்ணக் கனவும் தான்.


மருத்துவமனையில் நினைவு திரும்பிப் பார்க்க நினைத்தவருக்கு எங்கும் கருமை மட்டுமே மிஞ்சி இருந் தது. அவரை கவனிக்கவந்த மருத்துவரிடம் "ஏன் எனக்கு எல்லாமே இருளாகத் தெரிகிறது" என்று வினவியுள்ளார். அதற்கு மருத்துவர் "கண்களில் கட்டுப் போடப்பட்டு இருக்கிறது ஆகையால் இருட்டாகத் தெரியும்" என்று வேத னையோடு பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.


 ஆனால் சிறிது நேரம் கழித்துத் தனக்கு நடந்தவற்றைப் புரிந்து கொண்டு எனது பார்வை பறிக்கப்பட்டுவிட்டது என்று அறிந்துகொண்டார்.


 அவரை தாலிபான்கள் பார்வை பறித்துள்ளனர். அதுவும் அவரது தந்தையின் வழிகாட்டுதலில் தாலிபான் கள் இவ்வாறு செய்துள்ளனர் என அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.


 கட்ராவிற்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்கு எதிராகப் பல மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அமெரிக்காவில் டோனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆயுத விற்பனைக்காகத் தாலிபான்களின் கைகளை மறைமுகமாக அவிழ்த்து விட்டார். 2018-ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து அமெ ரிக்கத் துருப்புகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப் பட்டன. அன்றிலிருந்து தாலிபான்கள் மீண்டும் தங்கள் பழமைவாத முகத்தைக் காட்டத் துவங்கிவிட்டனர். தாலிபான்கள் கத்தார் நாட்டில் வைத்து ஆப்கான் அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி, உள்நாட்டுப் போரைத் தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டு வருவதாக அறிவித்தனர். ஆனால் உள்ளூர, அவர்கள் மீண்டும் ஆப்கானில் தங்களின் பயங்கரவாதச் செயலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.


 முக்கியமாக ஆப்கானியப் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கவேண்டும். வீதிகளுக்கு வந்தால் கூட ஆணின் துணையோடுதான் வரவேண்டும் என்று ஊர் ஊருக்குச் சுற்றறிக்கை விட ஆரம்பித்துவிட்டனர்.  அண் மைக் காலமாகப் பெண்ணுரிமை அமைப்புகள் மிரட்டப் பட்டுவருகின்றன. பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் இனி வந்தால் கொல்லப் படுவீர்கள் என்று மிரட்டப் படுகின்றனர். அங்குப் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தும் நசுக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன என்று பன்னாட்டு மன்னிப்புச்சபையின் ஆப்கானுக்கான தலை வர் சமீரா ஹம்தி கூறியுள்ளார்.  நீண்ட ஆண்டுகளுக்குப் பின் வெளியே வந்த பெண்கள் தற்போது தாலிபான்களின் அட்டூழியத்தால் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி யுள்ளனர்.


கட்ராவைப் பொருத்தவரை அவரது தந்தை மற்றும் கணவர் இருவருமே வேலைக்குச் செல்வதைக் கடுமையாக எதிர்த்துவந்தனர்.  ஆனால் கட்ரா இருவரது எதிர்ப்பையும் மீறி தன்னுடைய கனவை நினைவாக்கப் புறப்பட்டார்.   "பலமுறை நான் அலுவலகம் வரும் போது எனது தந்தை என்னைப் பின் தொடர்ந்து வந்தார்.  அவர் தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் தாலிபான்களை அணுகி நான் வேலைக்குச் செல்வதைத் தடுத்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். என்னு டைய அடையாள அட்டையை அவர்களிடம் கொடுத்து என்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூறியுள்ளார்.


பல முறை அடையாளம் தெரியாத நபர்கள் என்னைத் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளனர்" என்கிறார்.  இது தொடர்பாக அவரது தந்தையைச் செய்தியாளர்கள் தொடர்புகொள்ள முயன்ற போது அவர் தாலிபான்களோடு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது.


 தற்போது காபூலின் புறநகரில் தனது அய்ந்து குழந்தைகளுடனும் தனது தாயாரோடும் வசித்துவரும் அவர் சாலையில் யார் வரும் ஓசை கேட்டாலும் அச்சத் தோடு தனது குழந்தைகளை அழைத்து அணைத்துக் கொள்கிறார்.   அவரது தந்தையைக் கைது செய்யக் காவல் துறை முயன்று வருகிறது.


 அவர் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனைகளைத் தொடர்ந்து மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். இருப்பினும் அவரது கனவை யாராலும் இனி திருப்பித் தரமுடியாது.


 ஏதாவது நவீன கண்டுபிடிப்புகள் வந்தால் ஒழிய  அவருக்கு இனி எப்போதும் பார்வை வராது.  அவர் ராய்டர் ஊடகவியாளர்களிடம் கூறும் போது, "எனக்கு மீண்டும் பார்வை கிடைத்தால் நான் மீண்டும் ஆப்கான் காவல் துறையில் இணைந்து என்னைப் போல் பல பெண்கள் வேலைக்குச் செல்வதையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்வேன்" என்று கூறினார்.


 


Comments