வருந்துகிறோம்


மன்னார்குடி திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்  இரெ. சுதந்திரமணி (வயது 69) இன்று 6.11.2020 அதிகாலை மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெற்றது. தொடர்புக்கு மனைவி - ஜோதிமணி. மகன்கள்  எஸ்.ஜெ. பாவல் 9840736413,  எஸ்.ஜெ.ரசல் 9840542843


மறைந்த சுதந்திரமணி அவர்கள் தனது தாய் - தந்தை பெய ரில் இரத்தினம் செங்கம்மாள் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் முதியோர் காப்பகம் மற்றும் அரசுப் பணி பெற தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி ஏராளமான கிராமப்புற மாணவர்கள் அரசுப் பணியில் சேர தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர்.


Comments