தமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை வீழ்த்திட அணியமாவோம்!

திருப்பூரில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் பேச்சுதிருப்பூர், நவ. 4- தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் "விடுதலை" சந்தா சேகரிப்பு பயணம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியுடன் கூடிய மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் திருப் பூர் பெரியார் புத்தக நிலையத்தில் 31.10.2020 சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கி னார். திருப்பூர் மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன் வரவேற்றார்.


கழக அமைப்புச் செயலாளர் த. சண்முகம், கழக இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,திருப்பூர் மாவட்ட கழக அமைப்பாளர் வீ.சிவ சாமி, திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத்தலைவர் "நளி னம்" க.நாகராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.


தமிழ்நாட்டின் மீதான தாக்குதல் களை வீழ்த்திட அணியமாவோம் என்று திருப்பூரில் கழகப் பொதுச் செயலாளர் பேசினார்.


தமிழகமெங்கும கழகத் தோழர் கள் தேனீக்களாய் சந்தாக்களை சேகரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முதற் கட்டமாக சந்தா தொகைகளை வழங்கியுள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி ! இன்னும் பல கட்டங்களாக முனைப் புடன் வெகுமக்களை அணுகி சந்தாக் களை சேகரித்து வழங்கிடுமாறு கேட் டுக் கொள்கிறேன்.


"சமூகநீதி" என்ற மனிதநேய பிம் பத்தை தகர்க்க வரும் தாக்குதல்களை தவிடு பொடியாக்கும் வண்ணம் கழ கத் தோழர்கள் அணியமாகவேண்டும்!


இவ்வாறு கழக பொதுச் செய லாளர் உரையாற்றினார்.


திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் "விடுதலை" ஆண்டு சந்தா 3 , அரை யாண்டு சந்தா 7 , "உண்மை" ஆண்டு சந்தா 2 , " தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" ஆண்டு சந்தா 1 ஆகியவற்றிற்கான தொகை ரூ 12,640 கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.


திருப்பூர் மாநகர கழக துணைத் தலைவர் "ஆட்டோ" தங்கவேல், துணைச்செயலாளர் "தென்னூர்" முத்து, கழக தோழர்கள் சுப்பிரமணி, குணசேகர், சிவக்குமார், பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் கரு.மய்னர் ஆகியோர் கூட்டத்தில் பங் கேற்றனர்.


1) எதிர்வரும் டிசம்பர் 2 அன்று  சுயமரியாதை நாளான கழகத் தலை வர், ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளையொட்டி பல முனைகளில் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள் வதென தீர்மானிக்கப்பட்டது.


2) திராவிடர்களை இழிவுபடுத்தி ஆரியத்தை நிலைநாட்டும் "தீபாவளி" என்ற மூடநம்பிக்கையை தோலுரிக் கும் விதமாக "தீபாவளி" புரட்டு கருத் தரங்க நிகழ்ச்சியை மாவட்ட,மாநகர பகுதிகளில் ஆங்காங்கே நடத்துவ தென முடிவு செய்யப்பட்டது.


3) கழக ஏடுகளுக்கு சந்தா கேகரிப்பதை அன்றாட பணிகளுள் தலையாய பணியாக சிரமேற்கொண்டு வெகுமக்களை அணுகி பெருவாரியாக சந்தாக்களை சேர்ப்பதெனவும் தீர்மா னங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட் டது. கூட்டத்தின் நிறைவாக திருப்பூர் மாநகர கழக செயலாளர் பா.மா.கருணாகரன் நன்றி கூறினார்.


Comments