வாலிபர்களின் வழிகாட்டி  'விடுதலை'

உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் வாலிபர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாட்டின் முது கெலும்பாகத் திகழ்கின்ற நமது வாலிபர் கள் அறிவு, ஆற்றல், திறமை, எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் துணிவு, உண்மை, உழைப்பு, மனித நேயம் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற வர்கள் ஆவர்.


வாலிபர்கள் பல்வேறு ஆற்றல் களைப் பெற்றவர்களாக இருப்பினும், அவர்களில்  ஒருசிலர் தங்களுக்குள் புதைந்திருக்கும் திறமையை வெளிப் படுத்த முடியாமல் கிணற்றுத் தவளை யாய் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதோடு தங்களது பொன்னான நேரத்தை பக்தி போதை, கிரிக்கெட் போதை, செல்போன் போதை மற்றும் வாட்ஸ்அப், பேஸ்புக், இண்டர்நெட் ஆகியவற்றில் நேரத்தை யும் காலத்தையும் வீணடித்துக் கொண்டு உள்ளனர் என்பது கசப்பான உண்மை யாகும். இத்தகைய வாலிபர்கள் ஒரு கட்டத்தில் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு கால்போன போக்கில் திசைமாறிச் சென்று செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். அவர்கள் தங்களின் எதிர்காலம் கேள்விக் குறியா வதை நாளும் நினைத்து வேதனையில் உழல்கின்றனர். வாழ்க்கையில் விரக்தி யுடன் காணப்படுகின்ற வாலிபர்களி டையே முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் ஆவலும் ஆர்வமும் அதற்கான உத்வேகமும் நிரம்ப காணப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட் டுகின்ற வார்த்தைகளும், நல்வழிகாட் டுதலும் தேவைப்படுகின்றன.


இச்சூழலில் இனத்தைப் பேணிப் பாதுகாக்கின்ற கேடயமாகவும், இன எதிரிகளை வீழ்த்தும் வாளாகவும் நாளும் வெளிவருகின்ற ‘விடுதலை' நாளேட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநலன் சார்ந்த அறிக் கைகள், வாலிபர்களுக்கு நல்வழிகாட்டி யாக விளங்குகின்ற வாழ்வியல் சிந்த னைகள், தலைசிறந்த தலையங்கம், மின்சாரம் கட்டுரைகள் மற்றும் நாட்டு நடப்புகளை சீரிய செயல் வடிவில் பெட் டிச் செய்தியாகத் தருகின்ற ஒற்றைப்பத்தி, சிந்தனைத் தெளிவுபெற உதவும் கேள்வி - பதில் பகுதி ஆகியவற்றை ஒருங்கே பெற்று நாள்தோறும் மிடுக்குடன் வெளி வருகின்ற விடுதலை நாளிதழை வாசிக் கின்ற வாலிபர்கள் தங்கள் உடலில் புதிய ரத்தம் பாய்ச்சியது போன்ற உணர்வுடன் தன்னெழுச்சி பெற்று தன்னம்பிக்கை யுடன் வீறுநடை போடுகின்றனர் என்ற இனிய செய்தி இன மீட்பாளர்களை பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடை யச் செய்கிறது.


வீடெங்கும் விடுதலை - பாரெங்கும் பகுத்தறிவு எனும் லட்சிய வேட்கையுடன் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப் பால், தன்னல மறுப்பால், நாள்தோறும் பகுத்தறிவு மலராகப் பூத்துக் குலுங்கும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாகவும், வாலிபர்களின் வாழ்வியல் வழிகாட்டி யாகவும் விளங்குகின்ற ‘விடுதலை' நாளி தழை அகிலமெங்கும் கொண்டு சேர்க் கவும், தந்தை பெரியார் பணி முடிக்கவும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாளான டிசம்பர் 2, 2020 அன்று வாலிபர்கள் உறுதி மேற் கொள்ள உள்ளனர். அவ்வாலிபர்களை தமிழ்கூறும் நல்லுலகம் வாயார மன தாரப் பாராட்டி - வாழ்த்தி அகமகிழ்கிறது.


வாழ்க தந்தை பெரியார்!


வாழ்க தமிழர் தலைவர் !


- சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.


Comments