மனிதக் கழிவுகளை அகற்ற நவீனக் கருவிகள் பயன்பாடு!

புதுடில்லி, நவ. 23- மனிதக் கழிவுகளை அகற்ற நவீனக் கருவிகள்  பயன்படுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.


இந்தியாவில் கழிப்பறை என்னும் வழக்கம் ஆங்கிலேயர் காலத் துக்கு பிறகே வந்துள்ளது. அதற்கு முன்பு ஆற்றங்கரை, தோப்புகள், வயல்கள் போன்றவை கழிப்பறைகளாகப் பயன்படுத்தப் பட்டு வந்தன.   எனவே மனிதக் கழிவுகளை அகற்ற இந்தியாவில் அப்போது தேவை இருக்கவில்லை.


ஆனால் நாகரிகம் முன்னேற முன்னேறக் கழிப்பறை பயன்பாடு வழக்கத்துக்கு வந்தது.   இந்த மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை மனிதர்களே செய்து வருகின்றனர்.   இந்த வழக்கம் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது.  இதற்கு முடிவு கட்டவேண்டும் எனப் பல ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.


தற்போது அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு சஃபாய் மித்ரா சுரக்‌ஷா சேலஞ்ச் என்னும் திட்டம் ஒன்றை அறி முகம் செய் துள்ளது.   இந்த திட்டத்தின் கீழ் மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இனி மனித கழிவுகளை அகற்ற நவீனக் கருவிகள் பயன்படுத்தப்படும்  என்று அறிவித்துள்ளது.


 டில்லி, அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கெனவே இந்த கருவிகள் வந்துவிட்டது, ஆனால் இவை அனைத்தும் கண் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு மனிதக் கழிவுகளை அகற்ற நவீன கருவிகளைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று கூறியுள்ளது.


பணி நேரத்தை 12 மணியாக அதிகரிக்க பரிந்துரை: அதிர்ச்சியில் தொழிலாளர்கள்


புதுடில்லி, நவ. 23- மத்திய தொழிலார்நலத்துறையின் வரைவு அறிக்கை யில் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க  பரிந்துரைக்கப் பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் பாஜக அரசால் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன.   இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  அவற்றுக்கான வரைவு ஆணைகளும் மக்களின் கருத்துக்காக வெளியிடப்படு கின்றன.


அவ்வகையில் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மேம்பாடு குறித்து ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.   இந்த சட்டம் தொடர்பான வரைவு ஆணை 20.11.2020 அன்று வெளியாகி உள்ளது.  இந்த வரைவு ஆணைக்கான ஆட்சேபம் மற்றும் ஆலோ சனைகளை வழங்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த வரைவு ஆணையில் அமைச்சர்கள் குழுப் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.  இது அனைத்து தொழிலாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.   பல்வேறு தரப்பினரும் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பீகார் வேட்புமனுவில் வயது குளறுபடி செய்த துணைமுதல்வர் 


பாட்னா, நவ. 23- பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் வேட்பு மனுவில் தன்னுடைய வயதை தொடர்ந்து போலியானதாகவே பதிவு செய்துவந்துள்ளார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு தர்கிஷோர் பிரசாத்துக்கு 48 வயது என்று தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்


2010 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தனக்கு வயது 49 என்று குறிப் பிட்டிருந்தார் 2015ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுவில்  52 வயது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 64 என்று குறிப்பிட்டிருந்தார். 


இது தொடர்பாக சமூக ஆர்வலர் பீகார் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து துணைமுதல்வர் தொடர்பான தகவல் களைப் பெற்று மாநிலத்தின் துணை முதல்வருக்கே தனது வயது சரியாக தெரியவில்லை. அவரது கல்விச்சான்றிதழிலும் பிறந்த நாள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.


 இருந்த போதும் இதற்கான எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்து உள்ளது, தனது வயது தொடர்பில் இவ்வளவு குழப்பம் செய்யும் துணை முதல்வர் தன்னுடைய பதவி காலத்தில் நிர்வாகத்தை எவ்வாறு நிர்வாகிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 


Comments