பொருளாதாரம், வெளியுறவு, தேச பாதுகாப்பு குறித்துவிவாதிக்க காங்கிரசில் குழுக்கள் நியமனம்

புதுடில்லி, நவ. 21- பொருளாதா ரம், வெளிநாட்டு விவகாரங் கள், தேசப் பாதுகாப்பு ஆகி யவை தொடர்பான பிரச்சி னைகள் மற்றும் கொள்கை களை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும் 3 தனித்தனி குழுக்களை காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி அமைத் துள்ளார். 3 குழுக்களிலும் முன்னாள் பிரதமர் மன் மோகன்சிங்குக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார விவகாரங் களுக்கான குழுவில் முன் னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள். இக்குழுவின் அமைப்பாள ராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இருப்பார்.


வெளிநாட்டு விவகாரங்க ளுக்கான குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, சசிதரூர், சல்மான் குர் ஷித் மற்றும் சப்தகிரி உலகா ஆகியோர் இடம்பெறுகிறார் கள். சல்மான் குர்ஷித், இக் குழுவின் அமைப்பாளராக இருப்பார்.


தேச பாதுகாப்பு தொடர் பான குழுவில் நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, வின்சென்ட் எச். பாலா, வி.வைத்திலிங்கம் ஆகி யோர் இடம்பெறுகிறார்கள். இக்குழுவின் அமைப்பாள ராக வின்சென்ட் எச்.பாலா இருப்பார்.


இத்தகவல்களை காங் கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு புத்துயிரூட்ட கட்சியை முற் றிலும் மாற்றி அமைக்க வேண் டும் என்று சில மாதங்களுக்கு முன்பு 23 மூத்த தலைவர்கள், கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற் படுத்தியது. அப்படி கடிதம் எழுதிய குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, வீரப்ப மொய்லி, சசிதரூர் ஆகியோ ருக்கும் இந்த குழுக்களில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


Comments