தங்கப் புதையல் ஆசை: மந்திரவாதி பேச்சை கேட்டு பெற்ற குழந்தைகளை பலி கொடுக்க முயற்சியா

தங்கப் புதையல் ஆசை: மந்திரவாதி பேச்சை கேட்டு பெற்ற குழந்தைகளை பலி கொடுக்க முயற்சியா?


பொதுமக்களின் புகாரின்போரில் காவல்துறை விசாரணைகவுகாத்தி, நவ. 17- அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ் முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர்.  இவர்கள் இருவ ருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர்.


இவர்களின் நடவடிக்கையில் சந்தே கம் அடைந்த கிராமவாசிகள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதன்படி, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்துள்ளன.


இந்த சகோதரர்களிடம் பெஜ் என்ற மந்திரவாதி, உங்களுடைய குழந்தை களை பலி கொடுத்து விட்டால், உங்க ளது  வீட்டில் உள்ள மாமரத்தின்கீழ் மறைந்துள்ள தங்க புதையலை கண்ட றிவீர்கள் என கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பி அவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைகளை அடைத்து வைத்துள்ளனர். 


இதனை அறிந்த கிராமத்தினர் சகோ தரர்கள் இருவரையும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையின்போது, குற்றச்சாட்டுகளை மறுத்த அவர்கள், குழந்தைகளின் உடல்நலனுக்காக பெஜ்ஜிடம் ஆலோசனை கேட்டோம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் மந்திரவாதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Comments