அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் விசாரணை: நீதிபதி பி.கலையரசன் பொறுப்பேற்பு

சென்னை, நவ. 18- அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் 16.11.2020 அன்று  பொறுப்பேற்றார்.


அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரித்து, அதில் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் என் றும் மற்றொன்றை உயர் சிறப்பு அந்தஸ்து கல்வி மய்யமாகவும் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறை வேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி  வைக்கப்பட் டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், அண்ணா பல் கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, மத்திய மனித  வளத் துறைக்கு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் கடிதம் ஒன்றை தன் னிச்சையாக எழுதினார்.


இதற்கு பல்வேறு கல்வியாளர் கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம் பியது. இதையடுத்து, ` அண்ணா  பல்கலைக்கழகத்திற்கு அந்த சிறப்பு அந்தஸ்தே தேவையில்லை’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி.அன்பழகன் வெளிப்படையாக  தெரிவித்தார்.அதுமட்டுமல்லா மல் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர் கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற தாக அறிவிக்கப்பட்ட விஷயத்தில்  தமிழக அரசுக்கும் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.


மேலும், பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு பணி வழங்கிய தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந் தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதியில் சுமார் 200  கோடிவரை முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆசிரியர் பணியிடங்கள் நியமனத் தில் ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஒவ்வொருவரிடமும்  வாங் கியதில் சுமார் 80 கோடிவரை முறைகேடு நடந்துள்ளது. இதில் துணைவேந்தருக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்தன.   இந்த  குற்றச்சாட்டுகள் அனைத் தும் தமிழக அரசுக்கு புகார் மனு வாக வந்துள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பணி நியமனம்  வழங்கியதாகவும் சூரப்பா மீது புகார் வந்துள்ளது.


எந்த பிரிவின் கீழ் விசாரணை?


அண்ணா பல்கலைக்கழக சட் டத்தின்படி சூரப்பா பணி காலத் தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெறும். தற்காலிக  பணியாளர்கள் நிய மனம் மற்றும் இதர நியமனங்கள், சூரப்பா பணி காலத்தில் நடந்து உள்ளதா? அவற்றில் நியமனம் செய்யப்பட்டவர்கள் உரிய  தகுதி களை பெற்றுள்ளனரா? இதில் குற்றச் செயல்கள் நடந்துள்ளதா? ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் குற்றங்கள்  செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து விசா ரணை நடத்தப்படும்.


அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாரா?


துணைவேந்தர் சூரப்பா காலத் தில் பல்கலைக்கழகத்திற்கு வந்த நன்கொடைகள், உதவிகள், பல் கலைக்கழகத்திற்கு வந்த கல்வி கட்டணங்கள்,  பல்கலைக்கழகத்தின் செலவினங்கள் இவற்றில் நடந்த நிதி மோசடிகள் ஆகியவை குறித்து நீதிபதி விசாரணை நடத்துவார். சூரப்பா காலத்தில் நடந்த  ஒப்பந் தங்கள், அவற்றில் பங்கேற்றவர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் ஆகி யவை குறித்தும் விசாரணை மேற் கொள்ளப்படும். சூரப்பா காலத் தில்,  அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி பல்கலைக்கழகத்தில் முறை கேடுகள் நடந்துள்ளனவா? அதில் பங்கு கொண்டவர்கள் யார், யார் என்பது குறித்தும்  விசாரணை மேற்கொள்ளப்படும்.


மிகப்பெரிய பல்கலைக்கழகத் தின் துணை வேந்தராக பதவி வகித்துவரும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு, புகார்கள்  வந்து அதன் மீது விசாரணை நடத்தப் படுவது வட மாநில பல்கலைக்கழ கங்களிலும் பரபரப்பாக பேசப்படு கிறது. அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் களின் ஆவணங்கள் அரசு தரப்பி லிருந்து நீதிபதி பி.கலையரசனிடம் தரப்பட்டது. இதையடுத்து,  விரை வில் அவர் விசாரணையை தொடங்கவுள்ளார்.


Comments