ஏட்டுத் திக்குகளிலிருந்து...

தி இந்து:  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலப் பாடத்தில் அருந்ததி ராய் எழுதிய ‘தோழர்களுடன் ஒரு பயணம்’ (Walking with the Comrades) எனும் ஆங்கில நூல், மாவோயிஸ்டுகளைப் பற்றி புகழ்ந்து உள்ளதால் அதனை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என அகில பாரத வித்யார்த்தி பரிசத் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்நூலை பல்கலைக்கழகம் நீக்கிவிட்டது.

  • பீகாரில் அய்க்கிய ஜனதா தளக் கட்சி குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இனி அரசியல் தளம் பாஜக, ஆர்.ஜே.டி. மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சுற்றி நிகழும் என மூத்த பத்திரிக்கையாளர் பத்ரி நாராயண் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக உள்ளிட்ட எந்த கட்சியும் வெற்றி பெற்றதாக கூற இயலாது என பர்சா வெங் கடேஷ்வர ராவ் தனது கட்டுரையில் குறிப்பிடுள்ளார்.

  • பீகார் தேர்தலில் 500-க்கும் குறைவான வித்தியாசத்தில் ஆறு தொகுதிகளிலும், ஆயிரத்துக்கு குறைவான வித்தியாசத் தில் 12 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் 12 வாக்குகள் வித் தியாசத்திலும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

  • வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தில் ஊழியர் சங்கங்களும், வங்கி அமைப்பும் கையெழுத்திட்டன.

  • நான்காவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஓவைசியின் கட்சியும், இதர சிறு கட்சிகளும் வாக்குகளைப் பிரித்து, ஆர்.ஜே.டி. தலைமையிலான கூட்டணியின் வாக்குகளை 20 சதவீதம் பாதித்துள்ளது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • பீகார் தவிர்த்து ஏனைய சில மா நிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகும். பாஜக ஆட்சி செய்யும் அரியானாவில் ஒரு தொகுதியை காங்கிரஸிடம் பாஜக இழந்துள்ளது. ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக தோற்றுள்ளது என தலையங்கச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • தனது நோக்கம் பாஜகவை பாதிக்காமல், நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளத்தை வீழ்த்துவதுதான் என லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • ஒடிசா மாநிலத்தில் குழந்தைகள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்காடிக் கடைகளில் மீன்கள் வழங்க ஒடிசா அரசு முடிவெடுத்துள்ளது.


இந்துஸ்தான் டைம்ஸ்:  • ராஜஸ்தானில் பதினேழு நாட்களாக குஜ்ஜார் சமூக அமைப்புகள் நடத்திய ரயில் மறியல் போராட்டம், கேலாட் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், குஜ்ஜார் சமூக மக் களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை துரிதமாக முடித்து தீர்வு எட்டப்படும் என முதல்வர் அசோக் கேலாட் கூறியதை அடுத்து காரணமாக முடிவு பெற்றது.


குடந்தை கருணா


12.11.2020


Comments