மதம் மாறி நடத்தும் திருமணம் குற்றமல்ல அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அலகாபாத், நவ. 27- 'திருமண வயதை எட்டிய இரண்டு பேர், மதம் மாறி திருமணம் செய்வது குற்றமல்ல. யாரை திருமணம் செய்வது என்பதை முடிவெடுக்கும் சுதந்திரம், அவர்களுக்கு உள்ளது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


குஷிநகரைச் சேர்ந்த சலாமத் அன்சாரி மற்றும் அதே பகு தியைச் சேர்ந்த பிரியங்கா கர்வார், கடந்தாண்டு திருமணம் செய்த னர். முஸ்லிமாக மாறிய பிரியங்கா, தன் பெயரை, அலியா என்று மாற்றினார்.திருமணம் செய்வதற்காக, தன் மகளை கடத்திச் சென்று, கட்டாய மதமாற்றம் செய்துள்ளதாக, அந்த பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.


அதன்படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதை ரத்து செய்யக் கோரி, சலாமத் அன்சாரி சார்பில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சலாமத் அன்சாரி மற்றும் பிரியங்கா கர்வாரை, நாங்கள், முஸ்லிம், ஹிந்து வாக பார்க்கவில்லை. திருமண வயதை எட்டியவர்களாகவே பார்க்கிறோம்.தங்களுக்கு விருப்ப மானவர்களுடன் வாழ்வதற்கு, அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிடுவது, அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும். இருவரும் திருமணம் செய்து, ஓராண்டாக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.இதுபோன்ற வழக்குகளில், இந்த நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளில், 'திரு மணம் செய்வதற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது' என கூறப்பட்டுள்ளது; அது சட்டத்துக்கு ஏற்புடையதல்ல. அந்த தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளதை குறித்தே நாங்கள் எங்களுடைய கருத்தை தெரிவித்து உள்ளோம். தீர்ப்பு குறித்து நாங்கள் எதையும் குறிப்பிட வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.


Comments