பாலியல் குற்றவாளி சதுர்வேதி சாமியார் எங்கே

பாலியல் குற்றவாளி சதுர்வேதி சாமியார் எங்கே?


மூன்றாண்டுகளாக தேடுகிறதா காவல்துறை?சென்னை, நவ.6 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி, தொழிலதிபர் வீட்டில் அத்துமீறி ஆக்கிரமிப்பு - தாய், மகள் கடத்தல், பாலியல் வன்முறை செய்த தேடப்படும் குற்றவாளியான சாமியார் சதுர்வேதியை ஒரு வாரத்தில் கைது செய்யவேண்டும் என்று மகளிர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


சென்னை தியாகராயர் நகரில் சிறீ ராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சதுர்வேதி சாமியார். இவருக்குப் பிர சன்ன வெங்கடாச்சாரியார், வெங்கட சர வணன் போன்ற பெயர்களும் உண்டு. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கோரி 2004 ஆம் ஆண்டு சதுர்வேதியை நாடியுள்ளார். தொழிலதிபரின் பிரச்சினை யைத் தீர்த்து வைப்பதாகக் கூறி அவரது வீட்டுக்குச் சென்ற சதுர்வேதி அங்குச் சிறப்புப் பூஜைகளை நடத்தி இருக்கிறார். நாளடைவில் பூஜை செய் யப் போன வீட்டின் கீழ் தளத்தை சாமியார் சதுர்வேதி ஆக்கிரமித்துக் கொண்டார். அதோடு விசேஷ பூஜை என்ற பெயரில் தொழிலதிபரின் மனைவி மற்றும் 16 வயது மகளை பாலியல் வன் கொடுமை செய்திருக்கிறார். தனது அறைக்குள்ளேயே இருவரையும் அடைத்து வைத்து வன்கொடுமை செய்த தாகக் கூறப்படுகிறது. தொழிலதிபரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து இருக்கிறார். ஒருகட்டத்தில், தொழி லதிபரின் மனைவி மற்றும் மகளைக் கடத்திக் கொண்டு ஆந்திராவுக்குச் சென் றுள்ளார். சாமியார்மீது தொழிலதிபர் காவல் துறையில் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சதுர்வேதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த சதுர்வேதி 2016 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகி விட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நேபாளம், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் அவரை தேடி வந்த னர்.


இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று  (5.11.2020) சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதுர்வேதியுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி, சார்பில் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் டி.ஆர். பிரபாகரன் ஆஜரானார். அப்போது முக்கிய குற்றவாளியான சாமியார் சதுர் வேதி இல்லாமலேயே இவ்வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்று தெரி வித்துள்ளார்.


இதனிடையே ஆஜரான, இவ்வழக்கு விசாரணையின் சிறப்புக் குழுவில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம், ஏன் இன்னும் சதுர்வேதியைக் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்குச் சதுர்வேதியை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கைது செய்துவிடுவோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Comments