அமெரிக்காவின் பெருமுச்சு!


பெரும்பாலான அமெரிக்கர்கள் நீண்ட பெருமூச்சு விட்டனர்!


ஒரு வழியாக அமெரிக்க இனவெறி சர்வாதிகாரம் ஒழிந்தது!


இந்தத் தேர்தல் இன்னும் எவ்வளவு இனவெறி அமெரிக்காவில் தலைவிரித்தாடுகின்றது என்பதைக் காட்டியுள்ளது .


எவ்வளவு பொருளாதாரம், அமெரிக்கா முதலில் என்று சாயம் பூசினாலும் இனவெறி தான் முக்கியம் என்பதே பெரும்பான்மைக் கருத்து.


அதிலும் எதிர்பார்க்காதவர்கள் கூட இவ்வளவு வெறி யுடன் இருக்கின்றார்கள் என்று நம்ப முடியவில்லை.


மிகவும் நெருங்கிய வாக்குகளில் ஜோபைடன் வென் றுள்ளார். அதுவும் கமலா ஹாரிஸ் என்ற கறுப்புப் பெண் மணியுடன். உலகமே பாராட்ட வேண்டிய சாதனை .


இவர்கள் முதல் வேலையாக அனைத்து அமெரிக்கர் களையும் ஒன்று சேர்த்து, நாட்டை மனித நேய அமெரிக் காவாகக் கொண்டு செல்வது தான். இன வெறி, மத வெறி குறைக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். கரோனா நோய் பெரிய பாதிப்பு. அதை ஒன்றாகச் சேர்ந்து ஒழிப்பதில் அனைவரையும் ஒன்றிணைப்பார்கள்.  ஆனால், அவர் களுக்கு இன்னும் மேல்சபையில் பெரும்பான்மை கிடைக்க வில்லை. ஆகவே, இரண்டு கடசிகளும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்றுதான் பைடன் விரும்புவார் .


பைடன் உலகில் நல்லவர்களுடன் இணைந்து உலக அமைதி, சுற்றுச்சூழல், தொழில் வணிகம் என்று உலகத் தலைவர்களுடன் சேர்ந்து உழைப்பார்கள்.


மருத்துவர் சோம .இளங்கோவன்,


இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு, சிகாகோ, அமெரிக்கா.


Comments