ஜாதி ஒழிப்பு வீரர்கள் மறைவும் அன்னையாரின் மன உறுதியும்

கி.வீரமணிதமிழ்நாட்டின் மத்தியச் சிறைச் சாலை களில் இடநெருக்கடி ஏற்பட்டது; போதிய வசதியில்லாமல் பலரையும் அடைத்து வைத்த பரிதாப நிலை அப்போது!


திருச்சி மத்திய சிறையில் அளவுக்கு அதிகமான தண்டனைக் கைதிகளை அடைத்து வைத்து, அவர்களை மிகவும் கொடூரமாக நடத்தினர்; அங்கிருந்த ஜெயி லரை, காண்டாமிருகம் என்றே பலரும் அழைத்து, அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!


உணவு சரியாக இல்லாத காரணத்தாலும் வெப்பம் (திருச்சி பொன்மலை  பாறையின் வெப்பத் தாக்கத்தால் கூடுதலாக) காரண மாகவும் பல கழகக் கைதிகளுக்கு கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.


இப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்ற பட்டுக்கோட்டை இராமசாமி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 08.03.1958 அன்று திருச்சி மத்திய சிறையில் மறைந்தார். அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறைச்சாலைக்குள் ளேயே சிறை அலுவலர் புதைத்துவிட்ட கொடுமையும் - சட்டவிரோத நடவடிக்கை யும் நிகழ்ந்தது.


இந்தத் தகவலை வெளியே அனுப்பி, அன்னை மணியம்மையாரின் காதுகளுக்கு வந்தது. திருச்சி வழக்குரைஞர் தி.பொ. வேதாசலம் அவர்களுக்கு முதலில் கொண்டு  சென்றனர். அவர், சிறைக்குள்ளே நிகழ்ந்தமைக்கு நாம் என்ன செய்ய முடியும்?  என்று அலட்சியமாகக் கூறிவிட்ட நிலையில்தான், திருச்சி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் அன்னையாருக்குத் தெரிவித்தனர். நானும் அன்னையாருடன் இருந்தேன்.


திருச்சியிலிருந்து இந்தத் துயரச் செய்தி கிடைத்ததும் நேரில் பார்ப்பதற்காக அன்னை மணியம்மையார் 9.3.58 அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பிளைமூத் காரில் சென்னையிலிருந்து திருச்சி புறப்பட் டார்கள். அன்னையாருடன் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் நானும் புறப்பட்டுச் சென்றோம்.


நாங்கள் திருச்சியை இரவு 10 மணியள வில் அடைந்து திருச்சி மத்திய நிருவாகக் குழுத்தலைவர் தி.பொ.வேதாசலத்தைச் சந்தித்து விவரம் அறிந்தோம்.


தி. பொ.வேதாசலம் கழகத் தோழர்க ளுடன் காலையிலிருந்தே மத்திய சிறை அதிகாரிகளைக் கண்டு சிறையில் உயிர் நீத்த தோழரின் சடலத்தைக் கழகத்தினரிடம் அளிக்குமாறு வேண்டியும் அதிகாரிகள் தர மறுத்து விட்டதாகத் தெரிவித்தார். அதன் மேல்  மீண்டும் நாங்கள், சிறை அதிகாரி களைச் சந்தித்துக் கேட்டுப் பார்த்தும். பிணத்தைக் கொடுக்க மறுக்கவே, இது குறித்து வேண்டுகோள் விடுத்து அன்னை யார் முதல் அமைச்சருக்குத் தந்தி அனுப் பினார். இதற்கிடையில் சிறையிலிருந்து மிக  ஆபத்தான நிலைமையில் திருச்சி மத்திய சிறை மருத்துவனையில்  அனுமதிக்கப்பட்ட மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பொன் னுச்சாமி மகன் வெள்ளைச்சாமியும் ஆஸ் பத்திரியில் சேர்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் மரணமடைந்த செய்தி கேட்டு ஆஸ்பத் திரிக்கு விரைந்து அந்தச்  சடலத்தை வாங்கி வந்தனர்.


எனவே அன்னை மணியம்மையார், வீரர் ராமசாமியின் உடலைப் பெற அடுத்த முயற்சியாகச் சென்னையில் முதலமைச்சர் காமராசர், உள்துறை அமைச்சர், சிறைத் துறைத் தலைவர் ஆகியோரைக் காணச் சென்னைக்கு உடனே புறப்பட்டார். என் னைத் திருச்சியிலிருந்து கவனித்துக் கொள் ளச் சொன்னார் அம்மா.


அதே நாளில்  சென்னை சென்று பொதுமருத்துவமனையில் (சிறை தண் டனை அனுபவித்த) தந்தை பெரியாரி ரைச் சந்தித்து இத்தகவலைக் கூறினார்; அய்யா வும் மிகுந்த வேதனையுற்று, உடனே முதல மைச்சர் காமராசரைக் கண்டு பரிகாரம் தேட, தோழர்களின் உடல்களை மீட்க, கேட்டுக்கொள்ளச் சொன்னார் அன்னை மணியம்மையார்.10.03.58 அன்று சென்னையில் அன்னை மணியம்மையார், வழக்கறிஞர் திரு. பி. ரெங்கசாமியுடன் முதல்வர் காமராசர் இல்லம் சென்று, நிலைமையை விளக்க, அவர் போனில் சிறைச்சாலை அமைச்ச ரான எம்.பக்தவத்சலத்திடம் பேசினார் அன்னையார். அமைச்சர்களையும் கண்டு பெரிதும் முயன்று அனுமதி பெற்றார், சென்னையிலிருந்து மேலிடத்து உத்தரவு பெற்ற பின்னரே சிறை அலுவலர் வேதாச லத்தை அழைத்துப்  பட்டுக் கோட்டை ராமசாமியின் சடலத்தை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். வேனில் சடலத்தை வைத்துப் பெரியார் மாளிகை வரை கொண்டுவந்து கொடுக்கும் படி ஏற்பாடு செய்தாவாறே உடல் பெரியார் மாளிகை யில் வைக்கப்பட்டபின், இருவர் உடல் களும் அலங்கரித்து வைத்த இடத்தில்  ஆயிரக்கானக்கானோர் வந்து மலர் மாலைகள் அணிவித்து இறுதி வணக்கம் செலுத்திச் சென்றனர். இச்செய்தி பரவிய தால், பல்லாயிரக்கணக்கில் பொதுமக்க ளும், கழகத் தோழர்களும் கூடிவிட்டனர். என்னைத் திருச்சியிலிருந்து ஏற்பாடுக ளைக் கவனிக்கச் சொல்லி சென்னை சென்ற அன்னையார் திரும்பி வந்து கொண்டிருந்தார் அதே பிளைமவுத் காரில்.


காவல்துறையினர் கெடுபிடி காட்டத் துவங்கி, உடனே அடக்கம் செய்துவிடுங்கள் என்று அவசரப்படுத்தினர். நானும் தோழர் களும் மறுத்தோம். அன்னையார் திருச் சிக்கு வந்துகொண்டுள்ளார். அவர் வந்த பிறகே ஊர்வமாக ஓயாமாரி சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்வோம் என்று கூறினோம். மத்திய நிர்வாகக் குழுத் தலைவரான வழக்குரைஞர்  தி.பொ.வேதாசலமோ, போலீசிடம் கூறிவிட்டோம். உடனே எடுத் துச் செல்வோம் எனக்கூற, கழகத் தோழர் கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டனர். நான் ஒரு வகையாகச் சமாதானம் கூறியும் வக்கீலய்யா வேதாசலம் கோபித்துக் கொண்டு தனியே சென்று வீடு சென்று விட்டார்.


சில மணி நேரத்தில் அன்னையார் வந்து, ஊர்வலம் காந்தி மார்க்கெட்  கடை வீதி வழிசென்றது. அன்னையாருடன் நாங்களும் கூடவே ஊர்வலத்தில் 2 மைல் தூரம் நடந்தே சென்றோம்.


மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான திரு.சோலை என்பார், கடைவீதி  வழியே சவ ஊர்வலம் செல்ல முடியாது என்று தனது அதிகாரத்தைக் காட்டித் தடுத்தார் காவல் படையுடன்.


அன்னையார் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை அப்படியே நடுரோட் டில் அமரச் சொன்னவுடன் பல்லாயிரம் தோழர்கள் உட்கார்ந்துவிட்டனர்; கடை வீதி வழியே செல்வதுதான் உரிய வழி; அது எங்கள் உரிமை அதைத் தடுக்கக் கூடாது என்று வீராங்கனையாகக் கர்ஜித்தார்.


போலீஸ் அதிகாரிகள் நடுங்கிவிட்டனர். சிறிதுநேரம் மவுனம்; அசையவில்லை யாரும். வேறு வழியில்லாமல் பிறகு அனுமதித்தனர்.  இடுகாடு சென்று அங்கே அவ்விரு ஜாதி ஒழிப்பு வீரத் தியாகிகளைப் புதைத்துவிட்டு இரங்கல் கூட்டமும் நடத்தி, மாளிகை திரும்பினோம்.


ஊர்வலத்தின் முன் ஆயிரக் கணக் கானோர் கருஞ்சட்டை அணிந்து அமை தியாகச் சென்றனர். திருச்சி நகர் என்றும் காணாதவாறு  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் துக்கத்துடன் அமைதியாகச் சென் றது குறிப்பிடத்தக்கது காவலர்கள் ஏராள மானவர்கள் தொடர்ந்து வந்தனர். நக ரெங்கும் போலீஸ் காவல் கெடுபிடி அதிக மாயிருந்தது. மணியம்மையார் முதலமைச் சரிடம் பட்டுக்கோட்டை ராமசாமியின் உடலைச் சிறை அலுவலர்கள் தங்களிடம் ஒப்படைக்காதது பற்றிக் குறிப்பிட்டபோது அதற்கு அவர் உடலைக் கொடுத்தால் ஊர்வலமாக எடுத்துச் சென்றால் ஏதாவது கலவரம் நிகழக்கூடுமோ என்று அஞ்சியே கொடுக்காமலிருக்கலாம் என்று  கூற, அதற்கு மணியம்மையார் ஊர்வலம் எடுத் துச் சென்றால் ஊர்வலத்தில் எவ்விதக் குழப்பமோ கலவரமோ இல்லாமல் அமை தியாக நடத்திச் செல்வோம் என்று உத்தர வாதம் கொடுத்திருந்தார். அவ்வாறே எவ் விதக் குழப்பமுமின்றி அமைதியாக ஊர் வலம் இடுகாட்டை அடைந்தது. மயானத் தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மணி யம்மையார் , நான், திருவாரூர் தங்கராசு ஆகியோர் பேசினோம். பின்னர் நினைவுச் சின்னம் எழுப்பிட வசதியாக முனிசிபல் மயானத்தில் தனியான இடத்தில் வீர வணக்கத்துடன் அடக்கம் செய்யப்பட்டது.


அன்னையாரின் வீரதீரம் பாசத்தையும் கண்ட கழகத் தோழர்களும் குடும்பங்களும் அம்மாவிடம் அளவுகடந்த மதிப்பையும் மரியாதையும் மேலும் அதிகரித்துக் கொண் டனர்!


 


Comments