சமூகத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியலில் தி.மு.கழகமாகவும் களமாடுகிறது

‘தமிழகம் மீட்போம்’ சேலம் காணொலிப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்சேலம், நவ. 22- சேலம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நேற்று (21.11.2020) 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலை வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின்  காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப் புரையாற்றினார்.


அந்த உரையில் குறிப்பிட்டதாவது:


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட் டணத்தை தி.மு.க. ஏற்கும் என்று இன்று அறிவித்திருக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் அதற்கான கல் விக் கட்டணத்தைச் செலுத்த வேண் டும். இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், தங்களுக்குக் கிடைத்த இடத்தை வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.


"எப்படி மருத்துவம் படிக்கப் போகிறோம்" என்று கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் ஊடகங்களில் கண்ணீருடன் அளித்த பேட்டியை நேற்றைய தினம் நான் பார்த்தேன்.


இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோதுதான், அந்தக் கல்விக் கட்டணத்தை தி.மு. க.வே செலுத்தும் என்று இன்று (21.11.2020) காலையில் அறிவித்தேன். இது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.


உடனே, எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்திருக்கிறார். முதலமைச்ச ருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. அரசி யல் செய்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். தி.மு.க. அரசியல் செய் ததால்தானே இன்று இந்த அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார். இல்லாவிட்டால் செய்திருப்பாரா?


மாணவர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தெரிந் ததும் அரசே செலுத்தும் என்று முத லிலேயே தெளிவாக சொல்லி இருக் கலாமே? நேற்று நீதிமன்றத்திலும் அதனைச் சொல்லவில்லையே!


இப்போது இந்த ஸ்டாலின் விட்ட அறிக்கைக்குப் பிறகு தானே பழனிசாமிக்கு ஞானோதயம் வந்தது? உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடை கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தா லும் தி.மு.க. தான் ஆளும்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


சித்தர்கள் வாழ்ந்த கஞ்சமலை, வள்ளல் பாரியின் மகளுக்கு அவ்வை யார் திருமணம் செய்து வைத்த உத்தமசோழபுரம் கோவில், அய்தர் அலியின் ஆளுகையிலிருந்த திருமணி முத்தாறு கோட்டை என பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட சேலத்தில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மகத்தான இடம் உண்டு


திராவிட இயக்கத்தின் வரலாற்றி லும் இந்த சேலத்துக்கு மகத்தான இடம் உண்டு. 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் நாள் இதே சேலத் தில் தான் நமது தாய்க்கழகமாம் திரா விடர் கழகம் உருவானது. தென்னிந் திய நல உரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என அடையாளம் கொடுத்து புதுப்பெயர் சூட்டியவர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்தத் தீர்மா னத்துக்கு ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்று பெயர் சூட்டி ஏற்றுக் கொண் டவர் தந்தை பெரியார் அவர்கள்.


மக்கள் இயக்கமாகவும், தமிழர் களின் உரிமைக் காப்பு இயக்கமாகவும் இந்த இயக்கத்தைத் தந்தை பெரியா ரும், பேரறிஞர் அண்ணாவும் மாற் றிய ஊர் இந்தச் சேலம். அந்த மக்கள் இயக்கம் தான் இன்றைக்கு சமூகத் தளத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் களமாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அடித் தளம் அமைத்த ஊர் இந்த சேலம்!


முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் இளமைக் கால வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஊரும் சேலம் தான்! திருவாரூரில் இருந்து கன்னித் தமிழோடும், கற்பனை உள்ளத்தோ டும் கிளம்பிய கலைஞருக்குள் இருக் கும் கலைஞரை உணர்த்திய ஊர் இந்த சேலம்.


1949-1950 காலக்கட்டத்தில் சேலம்  கோட்டைப் பகுதியில் அய்பீப் தெருவில் தான் கலைஞர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக சேலத்தில் தங்கி மந்திரிகுமாரி படத் துக்குக் கதை - வசனம் தீட்டினார். அவரே பிற்காலத்தில் அமைச்சராக, முதலமைச்சராகவும் ஆனார். சேலத்தில் தங்கித் திரும்பிப்பார் படத்துக்குக் கதை - வசனம் எழுதினார். அதிலிருந்து தமிழ்நாடே அவரைத் திரும்பிப் பார்த்தது. சேலத்தில் கலை ஞரின் வசனத்தை தியேட்டரில் போய்க் கேட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சேலத்திலிருந்த கலைஞரைச் சென்னைக்கு அழைத்து கொண்டார் என்பது தான் வரலாறு.


தமிழகத்தை மீட்க


இன்னும் சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது சேலத்திலி ருந்துதான் கலைஞர் அவர்கள் அதன் தொடக்கவிழாவுக்குச் சென்னை வந்தார்கள். அத்தகைய புகழ் மிகுந்த சேலத்தில் இன்றைய தினம் தமிழகம் மீட்கக் கூடியிருக்கிறோம்.


இந்த சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டிய ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்!


சேலம் உருக்காலை, அய்ம்பது ஆண்டுக் கனவுத்திட்டமான சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல் கலைக்கழகம், சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, சேலம் மாநகராட்சிக்காக 283 கோடியில் காவிரி தனிகூட்டுக் குடிநீர் திட்டம், சேலம் மாநகரத்துக்கு 183 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம், சேலம் திருமணி முத்தாறு - வெள்ளக்குட்டை ஓடை தூய்மைப்படுத்த 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சேலத்தில் 136 கோடி மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெசா லிட்டி மருத்துவமனை, ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்காட்டில் தாவர வியல் பூங்கா, சேலம் மாவட்டத்தில் 9 உழவர் சந்தைகள், சேலம் - ஆத்தூர் குடிநீர்த்திட்டம், 38 கோடி ரூபாய் மதிப்பில் சேலம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 150 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மற்றும் தாழ்வழுத்த புதை கம்பி தொடர் மின் பாதைகள், மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம்.


கணக்கற்ற திட்டங்கள்


ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் பகு திகளில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள். சேலம் நகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம். சேலம் - கிருஷ்ணகிரி நான்கு வழிப்பாதையைப் போட வைத்தது. சேலம் - நாமக்கல் நான்கு வழிப்பாதையை அமைத்தல். சேலம் செங்கப்பள்ளி நான்கு வழிப்பா தையை அமைத்தல். தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானச் சேவை தி.மு.க. ஆட் சியில் தான் மீண்டும் தொடங்கப்பட் டது.


 - இப்படி கணக்கற்ற திட்டங்களைச் சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி; கலைஞரின் ஆட்சி!


ஆனால் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றாமல் முடக்கி வைத்திருக்கும் ஆட்சி தான் இந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப் பட்ட திட்டங்களை, மக்களின் நன் மையைப் பார்க்காமல் முடக்கி வைத் துள்ளது இந்த எடப்பாடி பழனி சாமியின் ஆட்சி.


இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.


 


Comments