மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!

பேரன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,


வணக்கம். தங்களை கவர்ந்த புத்தகங்கள் பற்றி நான் கேட்டிருந்த இரு கேள்விகளுக்கு, பதில்களை வாழ்வியல் சிந்தனைகளாக வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள். மிக்க மகிழ்ச்சி.


உங்களின் படித்தல் திறனைப் பற்றி நாங்கள் கொண்டிருந்த மலைப்பு, உங்கள் பதில்களால், பன்மடங்கு பெருகித்தான் இருக் கிறது. ”மனித நேயர்களும், பகுத்தறிவாளர்களும் தம்மை மேம் படுத்திக்கொள்ளவும்; உலகை புரிந்துகொள்ளவும் நல்ல புத்தகங் களை தொடர்ந்து படிக்கவேண்டும்” என்ற செய்தியை ஆழமாக உங்கள் வாழ்வியல் சிந்தனைகள் உணர்த்துகின்றன.  உங்களின் புத்தகப் படிப்பு பற்றி நாங்கள் தெரிந்துகொள்ளவிரும்பி கேட்ட கேள் விகளுக்கு; மிகப் பல வேலைப்பணிகளுக்கிடையே, நேர மெடுத்து விளக்கியிருக்கிறீர்கள்.


எங்களை மேலும் மேலும் ஊக்கமாக படிக்க; உணர்வாலும், அறிவாலும் பெரும் தூண்டுகோலாக தங்கள் பதில் அமைந்திருக் கிறது. நல்ல உடல் நலமும், உற்சாக மனநலமும் தங்களுக்கு தொடர்ந்து அமைந்திட பெரிதும் விழைகிறோம்.


அன்புடன்,


அரசு செல்லையா, அமெரிக்கா


Comments