அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை குறைக்கக் கோரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்


சென்னை, நவ. 30- கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத் துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் நேற்று (29.11.2020) சமூக சமத்துவத்துக்கான மருத்து வர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத்தின் பொதுச் செய லாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திர ளானவர்கள் பங்கேற்றனர்.


இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறியதாவது:


சிதம்பரம் ராஜா முத் தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், ஈரோடு மாவட்டம் அய் ஆர்டி பெருந்துறை மருத்து வக் கல்லூரியை அரசு ஏற்று நடத்தி வருகிறது. ராஜா முத் தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.


ஆனால் அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கெ னவே இருந்த அளவுக்கே ரூ.5.44 லட்சம் என நிர்ணயிக் கப்பட்டு வசூல் செய்யப்படுகி றது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணம் ரூ.3.85 லட்சமாக உள்ளது. இவ்வளவு கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற் றோர்கள் சிரமப்படுகின்றனர்.


இந்த மருத்துவக் கல்லூரி களை அரசே ஏற்ற பிறகு, இதர அரசு மருத்துவக் கல் லூரிகளுக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தைத் தான், இக்கல்லூரிகளிலும் அரசு வசூல் செய்ய வேண்டும். அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணத்தை வசூலிப்பது நியாயமல்ல.


இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப் படும் ரூ.13,670கல்விக் கட்ட ணத்தை இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். தனி யார் மருத்துவக் கல்லூரி களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.


Comments