மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்! போலி இருப்பிட சான்றுகள் அம்பலம்

சென்னை, நவ. 18- மருத்துவக் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (18.11.2020) தொடங்க உள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப்  பட்டியலில் இடம்பெற்ற பலரது பெயர்கள் பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் தெலங்கானா அரசு மருத் துவப் படிப்பு ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் கள் வெளியாகியுள்ளன.


16.11.2020 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப் போது அரசு இட ஒதுக்கீட்டு இடங் களுக்கான பட்டியல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான  (7.5%) உள் இடஒதுக்கீட்டு பட்டியல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டன.  அத்துடன் மேற்கண்ட 3 பட்டியல் களில் முதல் 10 இடங்கள் பெற்றுள்ள மாணவ, மாணவியர் விவரம் வெளியிடப்பட்டது.


தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் சுகாதாரத் துறை இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான  விவரங்களை தேடி னர். அப்போது, மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல மாணவர்களின் பெயர்கள், நீட் தேர் வுக்கான பதிவு எண்கள்  கேரளா, தெலங்கானா மாநிலங்களில் வெளி யான ரேங்க் பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், மருத்துவ தரவரிசைப்பட்டி யலில் இடம்பிடித்துள்ள மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இணைய தளம், டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பகிர்ந்தனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, தமிழகத்தில் 2020-21க் கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பின் அரசு ஒதுக்கீட்டு பட்டிய லில் டாப் 10 மாணவர்கள் பட்டியலில் 705 மார்க்  எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ள மோகனப்பிரியா ரவிச்சந்திரன் (பிசி) என்ற மாணவி,  கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டி யலில் 5ஆம்  இடம்பெற்றுள்ள விவ ரம் தெரியவந்துள்ளது. இதனால், அவர் இரு மாநிலத்திலும் விண்ணப் பித்துள்ளது தெரியவந்துள்ளது. அதே போல, தமிழகத்தில் வெளியிடப் பட்ட ரேங்க் பட்டியலில் இடம்பெற் றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும்  இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வில் பதிவு எண் 2702105444 (பூஜிதா பழனி), 4201120146 (ருகேஷ் பிரா னேஷ்), 1204002253 (நுகல சிவக் குமார் யுனிஷா),  4112006470 (சித் தார்த்தா), 1204006091 (வர்ஷினி கோமதி), 4102104078 (ஷியாம் சரண்), 4101122125 (சாய் சுகிதா) ஆகியோர் இரு மாநிலங்களில் விண்ணப்பித்துள் ளது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.


இவர்கள் தெலங்கானாவில் உள் ளூர் முகவரியில் இருந்தே விண்ணப் பித்துள்ளதாக அந்த  பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 7 பேரும் பொதுப்போட்டியாளர் (ஓ.சி) என்ற பிரிவின் கீழும் விண் ணப்பித்துள்ளதாக தெலங்கானா ரேங்க்  பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட மோகனப்பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேரும் எப்படி அந்த மாநிலங்களில் உள்ளூர் முகவரியை பெற்றனர்.


ஒரே நபருக்கு இரண்டு இருப்பிட சான்று எப்படி கிடைத்தது என்றும் கேள்வி எழுந்துள்ளது. மற்ற 7 பேரும் தமிழகத்தைச்  சேர்ந்தவர்களா அல்லது தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வர்களா என்ற குழப்பமும் ஏற்பட்டுள் ளது. ஏனெனில், இரு மாநிலத்திலும் அவர்கள் உள்ளூர்  முகவரி கொடுத்தே விண்ணப்பித் துள்ளனர். ஆனால், மோகனப்பிரியா நாமக்கல் முகவரி யைத்தான் தமிழகத்திலும், கேரளா விலும் கொடுத்துள்ளார்.  ஆனாலும், இரு மாநிலத்திலும் அவர் எப்படி விண்ணப்பித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர் சேர்க்கையில்  முறைகேடு நடந்திருப்பது தொடர் பான ஆதாரங்கள் அம்பலமாகியது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒவ்வொரு  ஆண்டும் பல மாண வர்கள் இரண்டு இருப்பிட சான்று களை காட்டி கவுன்சலிங்கில் பங் கேற்று தங்களுக்கு வசதியான கல்லூ ரிகளில் இடம்  பெற்றுவிடுகின்றனர். கடந்த ஆண்டும் இது  போல சில இருப்பிட சான்று பெற்று வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.


 


Comments