ஒற்றைப் பத்தி - சனாதன நோய்

அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது மாநிலங்களவையில் - சினிமா நடிகை ஷபனா ஆஸ்மி என்ப வர் ஒரு தகவலையும், கருத் தையும் தெரிவித்தார்.


மத்திய பா.ஜ.க. ஆட்சியில் திணிக்கப்பட்ட முதலாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் வெளிவந்ததைத்தான் அவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.


''மா கஹா அவுர் பப்பா கஹா ஹை?''


அம்மா எங்கே? அப்பா எங்கே? என்ற கேள்வி. அதற் குப் பதில் அளித்த குழந்தை என்ன சொன்னது?


''மா சோய்பர் அவுர் பப்பா ஆபீஸ் பர் ஹை!''


''சமையில் அறையில் அம்மா இருக்கிறார், ஆபீசில் அப்பா இருக்கிறார்'' என்று அந்தக் குழந்தை சொன்னது; பாடத் திட்டத்தில் இடம்பெற்று இருப்பதைத்தான் ஷபனா ஆஸ்மி எம்.பி., நாடாளுமன்றத் தில் சுட்டிக்காட்டினார்.


இந்திய ஹிந்து சமூக அமைப்பில் இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


படித்தவர்கள் ஏன், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யாக இருந்தவரிடத்தில்கூட இந்த மனப்பான்மை இருந்த துண்டே!


''Women should go back to their homes and not think of competing with men on everything. Since the lady is more capable of building the home, what is necessary that there must be a switch over from office to home.''


''பெண்கள் வீட்டு வேலை களை நிர்வாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள். ஆத லால், அவர்கள் அரசு அலு வல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக் குச் சென்று அந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். எதற்கெடுத் தாலும் ஆண்களோடு போட் டிப் போடும் மனோபாவத்தைக் கைவிடவேண்டும்.''


18.11.1990 அன்று பிரம்ம குமாரிகள் மாநாட்டில் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கூறியதுதான் இது.


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இதோ பேசுகிறார்:


‘‘மனைவி, கணவனுக்கு சேவகம் செய்வதையே கட மையாகக் கொள்ள வேண்டும்.


பெண்கள் இந்தக் கடமை யிலிருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது.


மனைவி என்பவள் கண வனின் தேவைகளை நிறை வேற்றுவதை மட்டுமே தலை யாய கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டை கவனிக்க வேண்டும். கணவனின் தேவை களைப் பூர்த்தி செய்ய வேண் டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர் களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிடவேண்டும். கணவ னின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கண வனுக்கு என்ன பலன்? ஆகை யால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விட வேண்டும்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசினார்.


சனாதன நோயால் பீடிக் கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் சிந் தனை இந்தத் தரத்தில்தான் இருக்கும், சிந்திப்பீர்!


 - மயிலாடன்


Comments