தீக்கதிருக்குப் பதில் : தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை: தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன

தீக்கதிருக்குப் பதில் : தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை: தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன?


உண்மைத் தகவல்கள் இதோ...!


- க.அருள்மொழி


"ஆந்திர மாநிலம் தனியாக அமைக்கப்பட்டபோது, அம்மாநிலத்திற்கு தலைநகர் எது என்ற கேள்வி எழும் பியது.சென்னையை ஆந்திரத்தின் தலைநகராக மாற்ற வேண்டுமென ஆந்திரப் பகுதியிலுள்ள காங்கிரஸ்காரர் கள் உள்ளிட்ட அனைவரும் கோரினர். ஆந்திராவை சேர்ந்த பிரகாசம் சென்னையை முழுமையாக ஆந்திரா விற்கு கொடுக்க இயலாவிட்டால், கூவத்தை மய்யமாக வைத்து தென் பகுதியை தமிழ்நாட்டிற்கும் வடபகுதியை ஆந்திராவிற்கும் அளித்திட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தார்.தமிழ்நாட்டிலுள்ள அமைப்புகள், சென் னையே தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பது தொடர வேண்டுமென வற்புறுத்தினார்கள்.தந்தை பெரியார், சென்னை ஆந்திரத்தில் இருந்தாலென்ன?தமிழ்நாட்டில் இருந்தால் என்ன? திராவிடத்தில்தானே இருக்கப்போகி றது என தெரிவித்துவிட்டார்.காமராஜர் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்."


மேற்கண்ட செய்தி1.11.2020,நாளிட்ட 'தீக்கதிர்' இதழில் தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் சிபி அய் (எம்) எழுதிய,'இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் கம்யூனிஸ்ட்களின் தனித்த சாதனை' என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உண்மை என்ன?


முதலில், கட்டுரையின் தலைப்புக்கே பெரிய மறுப்பும் விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறோம். மொழிவாரி மாகாணப் பிரிவினையின் போது தமிழர்கள்பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பெரும் நிலப்பரப்பு ஆந்திர, கருநாடக, கேரள எல்லைக் குள் சென்றன. அதோடு நீர்வள ஆதாரங்களும் சென் றன. கேரள எல்லையில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டில் சேர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். எரிகின்ற தீயில் எண் ணெய் ஊற்றுவதுபோல ‘‘மேடாவது, குளமாவது, எல் லாம் இந்தியாவுக்குள்ளேதானே இருக்கு?’’ என்றுபதி லளித்தார் காமராஜர். இதைப் போல பெரியாரும் சென் னையைப் பற்றி கருத்து தெரிவித்ததைப் போல தோழர் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.ஆனால் உண்மை என்ன?


தார் கமிட்டி, ஜே.வி.பி. கமிட்டி போன்றவற்றை யெல்லாம் சொன்னால் கட்டுரை நீண்டுவிடும், கால விரயம். அதனால் முக்கிய கீழ்க்காணும் செய்திகள் மட்டும் இப்போது தெரிந்தால் போதும்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தோழர்கள் - கே.காமராஜ், எம்.பக்தவச்சலம், டாக்டர் பி. சுப்பராயன், பி.எ. சுப்பையா, டி.செங்கல்வராயன் ஆகியவர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியின் தூதுக்குழுவொன்று தோழர்கள் எம்.ஏ. முத்தையா செட்டியார், ஆர். குழந்தை வேலு ஆகியவர்களுடன் நீதிபதி வாஞ்சுவைக்கண்டு ஒரு மனுவைக் கொடுத்தனர். சென்னை நகரம் தமிழ் நாட்டைச் சேர்ந்தது என்றும், ஆந்திராவின் தலைநகர மும், உயர்நீதி மன்றமும் சென்னைக்கு வெளியில்தான் இருக்கவேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள் என்று தெரிகிறது. ('விடுதலை', 11.01.1953)


வாஞ்சு குழு அறிக்கையில்


இருப்பது என்ன?


இந்தக்குழுவில் ம.பொ.சி. இல்லை என்பது கவனிக்கத் தக்கது. நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953இல் வாஞ்சு குழுவின் அறிக் கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். அவர் தம் பரிந்துரையில்,“சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமை யும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாட கைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது. அதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும், இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை" என்பதை வாஞ்சு உதாரண மாகக் காட்டியுள்ளார். இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக். 5)


"சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத் தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றும் கூறியுள்ளார். "ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன்." (பக். 8) அதற்கு உதாரணத்தையும் வாஞ்சு காட்டியுள்ளார். "ஒடிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது" என்கிறார். (பக். 9) "ஆந் திராவின் தலைநகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னைவிட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாதவர்கள் கூறுகிறார்கள். அது உடனே முடியக் கூடிய காரியமல்ல". (பக். 10)


"சென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36 இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும்". (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கருநாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங் களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது.சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக். 26)`


சென்னை பிரமுகர்கள் ஆலோசனை


"அனைத்துக் கட்சிக்கூட்டம், வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்) கண்டனம் அனுப்புவதற்காக சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகரா யர் கட்டிடத்தில் 13.02.1953இல் மாலை 4 மணிக்கு சென் னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.


அக்கூட்டத்திற்குச் சர்.முகமது உஸ்மான், பெரியார் ஈ.வெ.ராமசாமி, மேயர் டி.செங்கல்வராயன், மாஜி மந்திரி கள், எம்.பக்தவச்சலம், டி.பரமேஸ்வரன், எஸ்.முத்தையா முதலியார், மாஜி மேயர்கள், ராமநாதன் செட்டியார், ராதா கிருஷ்ணபிள்ளை, சிக்யதுல்லா சாயுபு, மாஜி அய்க் கோர்ட் ஜட்ஜ் பி. பாஷ்யம் அய்யங்கார், மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல். கரையாளர், பார்லிமென்ட் மெம்பர் பி.எம். லிங்கேஸ்வரன், எம்.எல்.சி., ம.பொ.சிவஞான கிராமணி, எம்.எல்.ஏ. கே. விநாயகம், டாக்டர் வி.கே. ஜான், எம்.பி. தாமோதரன், லக்கபராய், நஜீர் உசைன், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், மீனம்பாள் சிவராஜ், செரியன் ஆகிய தமிழ், கேரள, கருநாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு விஜயம் செய்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்து, பண்டித நேருவுக்கு ஒரு மெமோரண்டம் அனுப்புவது என்றும், அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும், ஒருமனதாக முடிவு செய்தனர். மெமோரண்டத்தில் மேற்கண்டவர்கள் கையெழுத்து செய்தார்கள். பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


இந்திய சர்க்காருக்கு வேண்டுகோள்!


அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தக வல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம் சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றன. ஆந்திர ராஜ்யத்தின் தலைநகரமானது. உயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக் கக்கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகி றோம். ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தை யும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் “விருந்தாளி யாகக்கூட” இருப்பதற்கு அனுமதிப்பதால் அனாவசிய மான தொல்லைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும். ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சவுகர்யமாகவும் நேச மனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகை யிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்தால் அனாவசியமான தகராறுகளுக்கும் சர்ச்சைகளும் ஏற்படும். ஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்பகாலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப் ராயப் படுகிறார்கள். ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆந் திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிக வும் ஆட்சேபகரமானது. சென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின் தலைநகராக இருக்கும். ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்து, ஆந்திர தலை நகரையும், உயர்நீதி மன்றத்தையும், தற்காலிகமாகக்கூட சென்னை நகரத்தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யாமலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம். ('விடுதலை', 14.02.1953)


தந்தை பெரியார் வேண்டுகோள்


சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர்ப் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டது. விரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசியதாவது.“மாட்சிமிக்க மேயர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, நான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட் டத் தகுந்த “காரசாரமான” பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காது. இந்தக் கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும். இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறது. காங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலை காட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாயப்பென்றே கருதுகிறேன். ஆதலால் இந்தக் கூட்டத் தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன். வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோ, சங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன். அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என் னைக் கூப்பிட மாட்டார்கள். அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறை பாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.நம் காரியம்: நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறது. அதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றன. சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாம் கடிவாளம் இல்லாத குதிரைகள். மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர் பார்க்கக் கூடுமா?இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்ட டமாகும். ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அள வுக்கே நமது எல்லை இருக்க வேண்டும்.ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அள வுக்குப் பேசுகிறேன்.


தோழர்களே! ஆந்திரா பிரிவினை விஷயத்தில் ஜஸ்டிஸ் வாஞ்சு அவர்கள் அறிக்கையைக் கண்டித்துப் பண்டித நேரு அவர்களுக்கு நமது கருத்தைத் தெரி விக்கும் தீர்மானத்தை உங்கள் ஆதரவு மீது இப்போது நிறைவேற்றப்பட வேண்டும்.அதைப்பற்றிப் பேசுவதென் றால், அந்த அறிக்கையின் கேட்டையும் பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதில் எனக்கு முன் பேசிய மாட்சிக்குரிய மேயர் அவர்களும், பெருமைக்குரிய பக்த வச்சலம் அவர்களும் மற்றும் பெரியோர்களும் பேசினார் கள். அந்தப்பேச்சுகள் பெரிதும் வாஞ்சுவையும், ஆந் திரக்காரரையும் கண்டிப்பதாகவும், அவர்கள் மீது அதிருப்திப் படுவதாகவும் தான் காணப்பட்டனவே தவிர, அதன் மூலாதாரத்தைக் கண்டித்ததாகவோ, அதைப்பற்றிப் பேசியதாகவோ ஒன்றும் தெரியவில்லை.காரணமானது அவர்களுக்குத் தெரியவில்லையோ, அல்லது அது பெரிய இடத்துச் சங்கதி என்ற தாட்சண்யமோ எனக்குத் தெரியவில்லை.நான் இப்போது வெளிப்படையாய்த் தெளிவாய்ச் சொல்லுகிறேன். தவறு இருந்தால் மேயர் அவர்கள் அருள்கூர்ந்து திருத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.


(நாளை முடியும்)


Comments