மாட்டுக்கறி சாப்பிடும் பெண்ணை மனுவாதிகள் ஏற்பார்களா

மாட்டுக்கறி சாப்பிடும் பெண்ணை மனுவாதிகள் ஏற்பார்களா?


* மின்சாரம்மன்னார்குடியை சேர்ந்த பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன் அய்யர் என்பவர் ஆங்கிலேயர் காலத்து அய்.சி.எஸ். அதிகாரி. பிறகு 1960களில் நேரு ஆட்சிக் காலத்தில் டில்லியில் உயர் அதிகாரியாக இருந்தவர். தன்னுடைய கடைசிகாலத்தில் சென்னை பெசன்ட் நகரில் வாழ்ந்து மறைந்தவர்.


கோபாலன் அய்யருடைய மகள் ஷியாமளா 1958ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு  கல்லூரியில் அவருக்கு அறிமுகமான ஜமாய்க்கா நாட்டை சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்துகொள்கிறார்.


ஷியாமளாவிற்கும், டொனால்ட் ஹாரிசுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன - கமலா ஹாரிஸ்,  மாயா ஹாரிஸ். 1971 ஆம் ஆண்டு டொனால்டிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறார் ஷியாமளா. பிறகு இரண்டு குழந்தைகளையும் ஒற்றைத் தாயாக அமெரிக்காவில் வளர்க்கிறார்.


கமலாவின் சகோதரி, மாயா ஹாரிஸ் தன்னுடைய 17 வயதில், பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அவருக்கு மீனாட்சி (மீனா ஹாரிஸ்) என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். மீனாவின் Biological father யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும்   கிடைக்க வில்லை. அமெரிக்காவில் இது ஒரு பெரிய விசயமல்ல. ஷியாமளா, கமலா, மாயா மூவரும் சேர்ந்து அந்த குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்திருக்கிறார்கள்.


சில ஆண்டுகளுக்குப்  பிறகு, மாயா தன்னுடைய கல்லூரி காலத்து நண்பரான டோனி என்கிற கருப்பினத்தவரை திருமணம் செய்து கொள்கிறார். மாயா சட்டம் பயின்று அவரும் ஒரு பிரபலமானவராகத் தான் இப் போது இருக்கிறார்.மாயாவின் மகள் மீனா (மீனாட்சி) சட்டம் பயின்று தற்போது வழக்குரைஞராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். மீனா திருமணம் செய்திருப்பது நைஜீரியா நாட்டினை சேர்ந்த நிகோலஸ் என்பவரை.


கோபாலனின் ஒரே மகன், ஷியாமளாவின் உடன்பிறந்த சகோதரர் பாலச் சந்திரன் திருமணம் செய்திருப்பது ஒரு மெக்சிகன் நாட்டை சேர்ந்த Latino பெண் மணியை. அவர் களுடைய மகள் சாரதா தற்போது அமெரிக்காவில் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார்.


கமலா ஹாரிஸ் 2014ஆம் ஆண்டு, தன்னுடைய 49ஆவது வயதில் டக்ளஸ் என்கிற ஒரு யூத இனத்தவரை திருமணம் செய்து கொண்டார்.


ஷியாமளாவின் முதல் தங்கை , அதாவது கமலாவின் முதல் சித்தி, டாக்டர் சரளா தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.


ஷியாமளாவின் இரண்டாவது தங்கை, அதாவது கமலாவின் இரண்டாவது சித்தி மகாலட்சுமி தற்போது கனடா நாட்டில் அவரது கணவருடன் வாழ்ந்துவருகிறார். அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.


மொத்தத்தில் பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன்  அய்யர்  அவர்களுடைய வாரிசுகள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து, இனம், மொழி, ஜாதி, மதம் அனைத் தையும் அடித்து துவம்சம் செய் திருக்கிறார்கள்!


இப்போது கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்க இருக்கிறார்.


ஓர் அய்யர் குடும்பம் பல பரிமாணங்களைப் பெற்று, குலம் கோத்திரங்களைக் 'குட்டி சுவராக்கி' அய்யர் ஆத்துப் பெண் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் உரு(மாறி) குலைந்து போய்விட்டது. இந்த நிலையில் சு.சாமிகள் அமெரிக்கத் துணை குடியரசுத் தலைவராக வந்திருக்கக் கூடிய வரை அய்யர் ஆத்துப் பெண் என்று ஏற்றுக் கொள்வார்களா?


ஏற்றுக் கொள்ளாததோடு மட்டுமல்ல- அவரை 'இந்து விரோதி' என்று சித்தாந்த ரீதி யாகவே முத்திரையும் குத்தி  - இந்திய அரசு இவரிடமிருந்து விலகியே நிற்க வேண்டும் என்று ஆப்தவுரையையும் இலவசமாக வழங்குகிறார்  -உண்மைதானே! கமலா ஹாரிஸ் குடும்பம் இதை விட இத்தனை இனக்கலப்புக்கு ஆளாக முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாட்டுக்கறியை, பன்றிக்கறியை ருசித்துச் சாப்பிடும் ஒரு பெண்ணை, எங்களாத்து 'மாட்டுப்' பெண் என்றோ, ஹிந்துப் பெண் என்றோ சொல்ல மனுவாதிகள்  - சு.சாமிகள்  பைத்தியக் காரர்களா?


துணைக் குடியரசுத் தலைவரானாலும் ஜாதித் துஷ்டம், துவேஷம் எப்படி எல்லாம் துள்ளி விளையாடுகிறது பார்த்தீர்களா!


Comments