மறைவு


நைனார்பாளையம் திராவிடர் கழக தலைவர் புலவர் கு.அண்டிரன் நேற்று (3.11.2020) இயற்கை எய்தினார். புலவர் கு.அண்டிரன் அவர்கள் 35ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றினார். அவரின்பணிக் காலத்தில் பெரியாரின் கொள்கைகளை மாணவர்கள் மத்தியிலும் சக ஆசிரியர்கள் மத்தியிலும் விளக்கி சிறப்பாகப் பணியாற்றியவர். தன்னு டைய கொள்கைகளுக்காக ஏராளமான இன் னல்களை அனுபவித்தவர். நைனார்பாளை யத்தில் தந்தை பெரியார் சிலையை நிறுவியவர். தான் சேகரித்து வைத்த புத்தகங்களை (2,500) தந்தை பெரியார் ஆராய்ச்சி நூலகத் திற்காக தமிழர் தலைவரிடம் நன் கொடையாக வழங்கியவர். அவரது பிரிவால் வாடும் அவரது வாழ்விணையர் இந்திரா மற்றும் குடும்பத் தினருக்கு கல்லக்குறிச்சி மாவட்ட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வீரவணக்கம் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், மாவட்ட துணைத் தலைவர் ஓவியம் மு.கலைச் செழியன், பொதுக்குழு உறுப்பினர் த.பெரியசாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார்,  நா. நல்லதம்பி, பொறியாளர் டி.செல்வமணி ஆகியோர் அவருடைய இறுதி நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு, இரங்கலுரையாற்றி மரியாதை செலுத்தினர்.


Comments