குழிபிறையில் ஆறு.முருகையா மறைவு

அரசு மருத்துவமனைக்கு உடற்கொடை


புதுக்கோட்டை, நவ. 6. புதுக் கோட்டை மாவட்டம் குழி பிறையைச் சேர்ந்த கழகத் தோழர் ஆறு.முருகையா  (வயது 74) கடந்த 1.11.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


குழிபிறை பகுதியில் அனை வராலும் கருப்புச்சட்டைக் காரர் என்றும் மிலிட்டரிக் காரர் என்றும் அன்போடு அழைக்கப்படுபவர் ஆறு.முருகையா.


அவருக்கு சீமா, ஜீவா, அணு, சாலினி என நான்கு மகள்கள் உள்ளனர். அவர் களில் ஜீவாவும் சாலினியும் தந்தை பெரியார் கல்வி நிறு வனங்களில் பயின்றவர்கள்.


அந்த மாணவியர் இருவ ரும் தங்கள் பெயர்களில் விடு தலைச் சந்தாக்களைச் செலுத் தியிருந்ததால் அவர்களின் இல்லத்திற்கு விடுதலை நாளேடு வீடு தேடி வந்து கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாசித்து வந்த முன்னாள் இராணுவ வீர ரான ஆறு.முருகையா தன்னை  திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டதோடு கழகத்தின் அனைத்து போராட் டங்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டவர்.


மேலும் கழக நிதியாகட் டும் விடுதலைச் சந்தாவாகட் டும் அனைத்துக்கும் தேனீ யைப் போல சுறுசுறுப்புடன் செயல்பட்டு தனது உழைப்பை இயக்க வாழ்விற்காக அர்ப் பணித்தவர். இப்போதுகூட தந்தை பெரியாரின் உருவச் சிலையை குழிபிறையில் நிறு வுவதற்காக ரூபாய் 70-ஆயிரம் வசூலித்து கரோனா காராண மாக பணிகள் தொடங்கப் படாமல் இருந்திருக்கிறது. அவரது நாணயத்தைப் பறை சாற்றும் விதமாக அந்தப் பணத்தை மாவட்டத் திராவி டர் கழகத்தின் பெயரில் வங் கியில் செலுத்தி வைத்திருக் கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


அவரது இறுதி நிகழ்வில் மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில இளைஞ ரணி ஆசைத்தம்பி உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தி னர். ஆறு.முருகையாவின் உடல் அவரது விருப்பத்தை நிறைவேற் றும் விதமாக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது.


Comments