பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை - ஆளுநரைச் சந்தித்து தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஈராண்டு காலமாக ஆளுநரின் தாமதிப்பும் சுட்டிக்காட்டவும் பட்டது



சென்னை,நவ.24 உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும், மாநில அரசு பரிந் துரை செய்தும் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை தொடர் பான முடிவு குறித்து ஈராண்டுகளாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப் பதைச் சுட்டிக்காட்டி, எழுவரையும் உடனே விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்து இன்று (24.11.2020) எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தினர்.


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தினார்.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த தளபதி மு.க.ஸ்டாலின் தான் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார்.


இச்சந்திப்பின்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் முனைவர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திமுக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.


திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:


மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு, வணக்கம்.


தாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும், நளினி, சிறீகரன் என்கிற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.


நாங்கள் வலியுறுத்திய போதும், அ.தி.மு.க. அரசு அவர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கவில்லை. மாண்பமை உச்சநீதிமன்றம் கடந்த 06.09.2018 அன்று பிறப்பித்த உத்தரவில், “அரசமைப்புச் சட்டத் தின் 161 ஆவது பிரிவின் கீழ், பேரறிவாளன் தமிழ்நாடு ஆளுநரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இயல்பாகவே, சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கச் சுதந்திரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.


மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலின் படியும் மற்றும் தி.மு.க. கொடுத்த அழுத்தத்தாலும், தமிழ் நாடு அரசின் அமைச்சரவை இந்த விவகாரத் தைப் பரிசீலித்து, 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படும் வகையில், மீதமுள்ள தண்ட னைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று, 9.9.2018 அன்று தங்களுக்கு பரிந்துரைத்தது. அமைச்சர வையின் இந்தப் பரிந்துரை தங்களுடைய ஒப்புதலுக் காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.


ஈராண்டாக ஆளுநர் முடிவு எடுக்கவில்லை!


மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது. அமைச்சரவை பரிந்துரைத்த போதும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.


அரசமைப்புச் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் - அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல் வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி யிருக்கிறது.


தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பேரறி வாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில் "இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014-ஆம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-இன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் - மனுதாரரின் அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக,  தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சி.பி.அய்.யும் சாதகமாக...


அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது - உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளி வந்துள்ளன.


தற்போது, 20.11.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஅய் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி ஆவணத்தில்,


"பன்னோக்கு விசாரணை முகமை மேற்கொண்டு வரும் விசாரணையில் மனுதாரர் (பேரறிவாளன்) குறித்து விசாரிக்கவில்லை". (பத்தி 4.5.1)


"மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடுதலையானது மனுதாரருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளு நருக்கும் இடைப்பட்ட விவகாரம்". (பத்தி 4.8)


"இந்த விடுதலை விவகாரத்தில்  சிபிஅய்க்கு எந்தப் பங்கும் இல்லை". (பத்தி 4.10) என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


சிபிஅய் தாக்கல் செய்துள்ள மேற்காணும் பதில் மனுவின்படி, மாநில அமைச்சரவை சட்டப்பிரிவு 163-இன் படி தங்களுக்குச் செய்துள்ள பரிந்துரையை ஏற்க மாண்புமிகு ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், இது இரண்டு ஆண்டுகளாக தங்களது அலுவலகத்தில் நிலுவையில் இருப்ப தென் பது மாநில நிர்வாகத்தைக் குறைத்துக் காண் பிப்பதோடு, மாநில அரசு சட்டத்தின்பாற்பட்டு நடை பெறவில்லையோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்து கிறது.


எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 9.9.2018 தேதியிட்ட மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று, நளினி, சிறீகரன் என்கிற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் மற்றும் பி. ரவிச்சந்திரன் ஆகிய தண்டனை பெற்றுள்ள ஏழுபேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Comments