ம.பி. - பா.ஜ.க. அரசின் இந்து மதவெறி ஆட்சி

‘பசு - புனித மாதா - ‘‘கோமாதா வரி'' விதிப்பு


போபால், நவ.24 பா.ஜ.க. ஆளும் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, தங்களுடைய இந்து மத அஜெண்டாவை செயல்படுத்துவதில் வெறித்தனத்தோடு ஈடுபட்டு வருகின்றன.


காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடித்த மத்திய  பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைப் பேசி இழுத்து, பா.ஜ.க. ஆட்சி உருவான நிலையில், அவசர அவசரமாக தமது இந்துவெறி அஜெண்டாவை நிறை வேற்றி வருகிறது.


பசுவை கோமாதாவாக அறி விப்பதோடு, ''கோமாதா வரி'' என்ற ஒன்றையும் விதிக்க முடிவு செய்துள்ளது.


பெண்கள், குழந்தைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படவேண்டுமானால், அதற் குப் பசுவை 'புனித' மாதாவாக அறி விப்பதுதான் வழி என்று மத்தியப் பிரதேச அமைச்சரவை கண்டறிந்துள்ளது.


மத்தியப் பிரதேச அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காணொலி முறையில் நடைபெற்றது. பசு மாடு தொடர்புடைய இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான், பசுவை 'புனித' மாதாவாக அறிவிக்கும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.


மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, வனத்துறை அமைச்சர் விஜய் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.


அதில், ''சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுவை பாதுகாப்பது அவசியம். ஊட் டச் சத்துக் குறைவுள்ள குழந்தைகளின் உடல்நலன் மேம்பட பசும்பால் பயன்படும். மரம் மற்றும் ரசாயன உரத்திற்கு மாற்றாக பசுஞ்சாணம் பயன்படும். இவை சுற்றுச்சூழலை காக்கும். அதனுடன், பசுவின் கோமியம் பூச்சிக் கொல்லியாகவும் மற்றும் மருந்துப் பொருளாகவும் பயன்படும். எனவே,  பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச் சினைகளை தீர்க்க பசுவை 'புனித மாதா' என அறிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


கோமாதா வரி


''பசுக்கள் நலனுக்காகவும், மாட்டுக் கொட்டைகைகளின் பரா மரிப்புக்காகவும் பணம் திரட்டு வதற்கு சில சிறிய வரி விதிக்க நான் யோசிக்கிறேன். நம் இந்திய கலாச்சாரத்தில் விலங்குகளுக்கான அக்கறை இப்போது மறைந்து வருகிறது.


எனவே, மாடுகளுக்காக பொது மக்களிடம் இருந்து கோமாதா வரியை வசூலிப்பது பற்றி யோசித்து வருகிறேன்'' என்றும் அவர் கூறி யுள்ளார்.


Comments