தஞ்சை திருவாளர் சுந்தரவதனம் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்


ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான தஞ்சை திரு. சுந்தரவதனம் அவர்கள் நேற்று (14.11.2020) சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம். மறைந்த திருவாளர் சுந்தரவதனம் அவர்கள் சிறந்த பண்பாளர்; எவரிடத்திலும் அன்புடனும், மரியாதையுடன் பழகும் பான்மையர்.


இவர் திருமதி சசிகலா நடராசன் அவர்களது அண்ணன் ஆவார். அவரை இழந்து வாடும் அவரது மகன் டாக்டர் வெங்கடேசன், மகள், மருமகன் டி.டி.வி.தினகரன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


15.11.2020


குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவரது மகன் டாக்டர்


சு.வெங்கடேசன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.


கழகத்தின் சார்பில் மரியாதை


கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன்,    நா.வெங்கடேசன்,  நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்,  பா.நரேந்திரன், நெடுவை. குழந்தை.கவுதமன்.  யோவான்குமார் ஆகியோர் இன்று


(15-11-2020) காலை 9 மணிக்கு தஞ்சையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.


Comments