பதில் சொல் பஞ்சாங்கத் தினமலரே!

எந்தக் காலத்திலும் இல்லாத இவர்களே வைத்துக் கொண்ட ஆரியர் - திராவிடர் நாகரிகம், சமூகநீதி, இனமான உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை பேசி தமிழக இளைஞர்களை மூளை சலவை செய்து வருகின்றனர். இத்தகையவர் திருந்தவே மாட்டார்களோ!


- 'தினமலர்', 31.10.2020 பக்.10


ஆரியர் - திராவிடர் என்பது திராவிடர் இயக்கத்தவர் கற்பித்துக் கொண்டதா?


சிந்துவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சொன்ன தொல்லியல் ஆய்வாளர் அய்ராவதம் மகா தேவன் (மேனாள் தினமணி ஆசிரியர்) திராவிடர் இயக்கத்தவரா? தேசிய கீதத்தில் 'திராவிட' என்பதை இடம் பெறச் செய்த இரவீந்திரநாத் தாக்கூரும் திராவிடக் கட்சியின் உறுப்பினர்தானா?


'எங்கள் நாடு' என்ற பாடலில் 'உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதியாரும்  கூறியது உண்டே!


மனுதர்மம் 10ஆம் அத்தியாயம் 44ஆம் சுலோகத்தில் திராவிடம் என்று வருவதால் மனு முனிவரும் திராவிட இயக்கத்தின் முன்னோடியா? இராமாயணத்தில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் ஆரியக் கவிகள் குறிப்பிட்டது திராவிடர்கள் மீது கொண்ட வெறுப்பே என்ற சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.எஸ். ராமசாமி அய்யங்காரும் திராவிடக் கட்சிக்காரர்களா? பதில் சொல் பஞ்சாங்கத் தினமலரே!


Comments