பெரியார் பெருந்தொண்டர் வை.தெட்சிணாமூர்த்தி படத்திறப்பு

காணொலியில் தமிழர் தலைவர் உரைகோவிந்தகுடி, நவ. 6- 1.11.2020 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில் கோவிந்த குடி யு.ஆர்.மாளிகையில் பெரியார் பெருந்தொண்டர் வை.தெட்சிணா மூர்த்தி (ஆசிரியர் ஓய்வு) அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி பகுத்தறிவாளர் கழக மேனாள் வெளி மாநில தொடர்பு செயலாளர் தி.இரா ஜப்பா தலைமையேற்றும் பகுத்தறிவா ளர் கழக மாநில தலைவர் மா.அழ கிரிசாமி அவர்கள் படத்தினை திறந்து வைத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.


நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் நினைவேந்தல் உரை காணொ லிக் காட்சியாக ஒளிபரப்பட்டது.


நிகழ்ச்சிக்கு வருகை தந்த உறவினர் கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆசிரியர் அவர்களின் உரை நெகிழ்ச்சியாகவும், கோவிந்தகுடி பகுதி இயக்க வரலாற்றை பறைசாற்றுவ தாகவும் இருந்தது என்று அய்யா அவர் களுக்கு நன்றி கூறினர்.


மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட தலை வர் கு.நிம்மதி, மாவட்ட. செயலாளர் சு.துரைராசு, திமுக ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், ப.க மாவட்ட தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், ப.க மாவட்ட செயலாளர் வி.மோகன், மாவட்ட கழ கத் துணைத் தலைவர் வலங்கை.வே. கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், பாபநாசம் ஒன்றிய தலை வர் வை.பூவானந்தம், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, வலங்கை மான் ஒன்றிய தலைவர் நா.சந்திரசேகரன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் க.பவானிசங்கர், குடந்தை பெருநகர தலை வர் கு.கவுதமன்,  மாவட்ட இளைஞரணி தலைவர்/பொதுக்குழு உறுப்பினர் க. சிவக்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய து.செயலாளர் நாச்சியார்கோயில் குண சேகரன் ஆகியோர் நினைவேந்தல் உரை யாற்றினர்.


கழகத் தோழர்கள், தோழைமைக் கட்சியினர்கள், உறவினர்கள், நண்பர் கள்  கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக தோழியர் தெ.மலர்கொடி நன்றி கூறி னார். நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவ சம் அணிந்தும், கிருமி நாசினி பயன் படுத்தியும், சமூக இடைவெளியையும் பின்பற்றினர்.


Comments