செய்தியும், சிந்தனையும்....!

ராமநாதனுக்குத்தான் வெளிச்சம்!


இராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் நகைகள் எடை குறைவு.


முதன்முதலில் முதலமைச்சர் ஓமாந்தூர் ராமசாமிதான் கோவில் நகைகளை எடை போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.


அதன் விளைவுதான் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன; எடை குறைவிற்குத் தேய்மானம்தான் காரணமாம் - அரசு அதிகாரி கூறுகிறார் -


ராமநாதனுக்குத்தான் வெளிச்சம்!


பரிதாபமே!


பீகாரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.


இதுதான் என் கடைசித் தேர்தல் என்று நிதிஷ்குமார் கெஞ்சியிருப்பது பரிதாபமே!


ஜனநாயகம்!


மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி முடிவுக்கு வரும்: - உள்துறை அமைச்சர் அமித்ஷா


மாற்றுக் கட்சி ஆட்சி என்றால் முடிவுக்கு வந்துவிட வேண்டும் - நல்ல ஜனநாயகமப்பா!


‘ஆரூடமோ!'


நிதி ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரம் மீண்டு விடும்: - மத்திய நிதியமைச்சர்.


'குடுகுடு தேவி ஜக்கம்மா!' என்ற குடுகுடுப்பை ஆரூடமோ! (ஏற்கெனவே பொருளாதாரம் மைனசில் இருக்கிறது).


வசதி யாருக்கு?


ராமன் கோவில் வளாகத்தில் வசதிகள்- மக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்.


அப்படியா? ஆலோசனை கூறும் மக்கள் அடிப்படை வசதிகளோடு வாழ்கிறார்களா என்பதைக் கவனிக்கவேண்டாமா?


மக்கள் அடக்கம்!


ஊரடங்கில் உதவாமல், ஓட்டுகேட்கும் தலைவர்கள்: - ராகுல் காந்தி.


அதுதான் மக்களை ''அடக்கி''யாயிற்றே - அது போதாதா?


Comments