தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை

சென்னை,நவ.21 இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப் பினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதற்கு எந்த தடைகளும் இல்லாத நிலையில், இளைஞர்கள் ஆன் லைன் ரம்மி, சூதாட்டம் உள்ளிட்ட விளை யாட்டுகளை விளையாடி வருகின்றனர்.


ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பெருமளவு பணத்தை இழந்த இளைஞர்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.


தலைவர்கள் கோரிக்கை


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளை யாட்டுகளை தடை செய்ய திராவிடர் கழகத்தலைவர்தமிழர்தலைவர்ஆசிரியர் உள்படபல்வேறுதரப்பினர் கோரி வந் துள்ளநிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய் யப்பட்டுள்ளது. இதனை விசா ரித்த நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிவிளை யாட்டுக்குதடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்துக்குஆளுநர்ஒப்பு தல்அளித்துள்ளார்.மேலும், ஆன்லைன் ரம்மிபோன் இணையவழி விளையாட்டு களை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை என்று தெரி விக்கப்பட்டுள்ளது.


Comments