இக்கட்டான சூழலில் இருந்து விடுதலை பெறும் நேரம்


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரீஸ் வென்றதை உலகின் புகழ்பெற்ற அரசியல் ஆங்கில இதழ் தற்போது ”இக்கட்டான சூழலில் இருந்து விடுதலை பெறும் நேரம்” என்று தலைப்பிட்டுள்ளது. 


மேற்கத்திய ஊடகங்கள் 2017-ஆம் ஆண்டிலிருந்தே டிரம்ப் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ஒட்டுமொத்த ஊடகத்தையுமே டிரம்ப் மிகவும் மோசமான வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்திருந்தார்.   தன்னுடைய மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர் மீது தண்ணீர் பாட்டிலை வீச முயன்றார். மேலும் சி என் என் ஊடகவியலாளரைப் பார்த்து ‘‘வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்து கொடுமைப்படுத்துவேன்'' என்று எல்லாம் விமர்சித்திருந்தார்.


ஒரு தொலைக்காட்சி நடிகை டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்தது குறித்து கேள்வி எழுப்பிய கருப்பின ஊடகவியாலாளரைப் பார்த்து ‘‘அட்லாண்டிக்கிற்கு அந்தபக்கம் (ஆப்பிரிக்கா) செல்லத் தயாரா?'' என்று மிரட்டினார்.


Comments