சட்ட எரிப்பு போராட்டக் களத்தின் முக்கிய நிகழ்வுகள்

* சென்னையில் கைது செய்யப்பட்ட தோழர் கள் 34 பேர் சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட போது போலீசார் கழகத் தோழர்கள் சட்டத்தினை எரிக்க முயன்ற தாக கூறினார்கள். நீதிபதி தோழர்களை நோக்கி, "சட்டம் எரிக்க முயன்றீர்களா?" என்று கேட் டார். தோழர்கள் அனைவரும் ஒரே குரலில் "நாங்கள் எரித்தோம்! கொளுத்தினோம்!" என்று நீதி மன்றமே அதிரும் வகையில் முழங்கினர்.


நீதிபதி உடனே போலீசாரை நோக்கி, "அவர் கள் எரித்ததாக சொல்கிறார்கள், நீங்கள் முயன்ற தாக கூறுகிறீர்களே?" என்று கேட்டார் காவல் துறையினர் அமைதி காத்தனர். தோழர்களை 10 ஆம் தேதி வரை ரிமாண்டில் வைக்க உத்தர விட்டார் நீதிபதி.


- - - - -


* திருச்சி மாவட்டத்தின்  இலால்குடி வட்டம் தனி முத்திரை பதித்தது. ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். இந்த பகுதிகளிலிருந்து மட்டும் சுமார் 300 பேர் கைதாயினர். அங்கு கைதான தோழர்கள் திருச்சி கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இடம் இல்லாமல் மீண்டும் இலால்குடி சப்ஜெயிலுக்குக் கொண்டு வரப்பட்டனர்.  கலெக் டர் தலையிட்டு திருச்சி மத்திய சிறையில் இடம் ஏற்பாடு செய்தார்.  இரவு 11 மணிக்கு மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பார்ப்பனர் விடுதியில் உணவு வாங்கியதால் தோழர்கள் யாரும் இரண்டு வேளை உணவு உண்ணவில்லை.


- - - - -


* திருப்பனந்தாள் சோழபுரம் கிராமத்தைச் சார்ந்த தோழர்கள் 139பேர் பங்கேற்று சட் டத்தை எரித்தனர். ஆனால் 4பேரை மட்டும் போலீஸ் கைது செய்தது. தங்களைக் கைது செய் யாததைக் கண்டித்து உள்துறை அமைச்சர் பக்த வத்சலம் அவர்களுக்கு எங்களை ஏன் கைது செய்யவில்லை? என்று கேட்டு கடிதம் எழுதி னார்கள் சட்டத்தை எரித்தப் போராளிகள்,,.


- - - - -


* திருச்சி தோழர் மாணிக்கம், திருமணமான ஒரே வாரத்தில் போராட்டத்திற்கு வந்து.  ஓராண்டு சிறை தண்டனை பெற்றவர். . சிறைக்குத்  தம்மைக் காண  வந்த இளம்  மனைவி,  கதறி அழுததால் இனிமேல் காண வரவேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டார். அவர் மனைவி இதனால் மனநோய்க்கு ஆளானார். ஓராண்டுக் குப் பின் மாணிக்கம் விடுதலையானபோது அவர் மனைவி மிகுந்த மனநோய்க்கு ஆளாகி யிருந்தார்,  ஒரு வாரம் மட்டுமே இணைந்து வாழ்ந்த  மண வாழ்க்கை நினைவுகளுடனே வாழ்ந்து மனைவிக்கு முன் மரணமடைந்தார்.


- - - - -


* வடக்குமாங்குடி விசுவநாதன் என்ற தோழர் சிறைப்பட்டிருந்தபோது, கருவுற்றிருந்த அவரு டைய வாழ்விணையர் மகப்பேற்றில் மகவை ஈன்றெடுத்தார். தம் செல்வத்தைக் கணவனிடம் காட்ட வந்தபோது குழந்தையைப் பார்த்தால் பாசம் ஏற்பட்டு மனம் மாறிவிடும். எனவே, பார்க்க விரும்பவில்லை என்று திருப்பியனுப் பினார் அத் தியாகசீலர்.


Comments