மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம் தொடரும் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி


சென்னை, நவ. 3- விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மீதான வழக்கை கண்டித்தும், சமூக வலை தளங்களில் அவதூறு பரப்புவோரை கைது செய்ய வலியுறுத்தியும் சென் னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.


இதில் கலந்து கொண்டு திருமா வளவன் பேசுகையில், “திமுக கூட்ட ணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு பேசியதை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புகின்றனர்” என்றார்.


திமுக தலைவர் ஏன் இதனை கண்டிக்க வில்லை என்று கேட்கின் றனர். இவர்களின் உள்நோக்கம் அனைவருக்கும் தெரியும். திமுக அணியில் உள்ள கட்சிகள் கொள்கை புரிதல் உள் ளவை. அங்கு குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். ஆன்லைனில் கொடுக்கப் பட்ட புகாரை ஆராயாமல் காவல் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவதூறு பரப்புகிறவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட புகார் கொடுத்துள்ளோம். அதன்மீது நட வடிக்கை எடுக்க மறுக்கிறது. எத்தனை வழக்கு வந்தாலும் மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் திருமாவளவன் கூறினார்.


தமிழகத்தில் இராமசாமி இருப்ப தால் இராமன் அரசியல் எடுபட வில்லை. இப்போது தமிழ்க்கடவுளான முருகனை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். அறுபடை வீடு என்றழைக்கப்படும் முருகன் கோவில் கள் அனைத்திலும் தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்துவார்களா? என் றும் கேள்வி எழுப்பினார்.


நீதிமன்றங்களில் மனு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், மனு(அ)நீதி இன்றுவரை பொது மக்களின் வாழ்க்கை மீது யுத்தம் நடத்திக் கொண் டிருக்கிறது” என்றார். மனு எங்கே வாழ்கிறார் என்றால் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களில் வாழ்கிறார். உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்பு கள் குறித்த நடத்தப்பட்ட ஒரு ஆய் வில், 1950லிருந்து 2020 வரையில் 38 தீர்ப்புகள் மனுநீதியை ஆதாரமாக காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 28 தீர்ப்புகளை வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 5 வயதுக்குட்பட்ட 2.50 லட்சம் குழந் தைகள் விதவையாக உள்ளனர் என் கிறது. எனவே மனு என்பது பழங்கதை அல்ல. மார்க்ஸ் கூறுவதுபோல், இறந்து போனவர்களின் சிந்தனை மரபு, உயி ரோடு வாழ்பவர்களின் மூளையை அழுக்கு மூட்டைப்போல் அழுத்திக் கொண்டிருக்கிறது என்பார். மனு 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டாலும், இன்றைக்கும் அரசு அதிகாரிகள், தலைவர்களின், நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்களின் மூளையில் மனு அழுக்கு மூட்டையாக வாழ்கிறது. மனுவுக்கு எதிரான உரையாடல், பெரும் போர் நடக் கிறது. மனுவை குழிதோண்டி புதைக் கும் வரை இந்த கருத்துக்கள போராட் டத்தில் தொடர்ந்து இயங்கி வரும் மார்க்சிஸ்ட் கட்சி உங்களுக்கு துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக பொதுச் செயலாளர்கள் து.ரவிக் குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Comments