என்ன வினோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு, பாரு!!

அ.தி.மு.க.வுடன் கூட்டணியை ஏற்படுத்த சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா - அரசு விழா என்பதைப்பற்றி எல்லாம் கிஞ்சிற்றும்  கவலையே படாமல் ‘அரசியல் பேசுகிறேன்' என்று பகிரங்கமாக ‘முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?' என்பதற்கு ஒப்ப பேசிவிட்டு, தான் தங்கிய இடத்தில் முதல்வர், துணை முதல்வர் இருவரையும் அழைத்து கூட்டணி, தங்கள் கட்சிக்கு எத்தனை இடங்கள்பற்றி எல்லாம் வலியுறுத்திய பின்னர், ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர்வாளும் சென்று பார்த்துள்ளார் - பேசியுள்ளார். இதுபற்றி இன்றைய ‘இந்து தமிழ் திசை' (23.11.2020) நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளதாவது:


‘‘இக்கூட்டம் முடிந்ததும் அமித்ஷாவை ‘துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.


அ.தி.மு.க. உடனான கூட்டணி, கடந்த மக்களவைத் தேர்தல் போலவே பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று குருமூர்த்தி கூறியதாக பா.ஜ.க.வினர் தெரிவிக்கின்றனர்'' என்பதுதான் அந்த செய்தி.


‘ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர்வாள்' ஓடோடி ஒன்று சேர்த்தார் அன்று!


இடையில், அ.தி.மு.க.வின் ‘‘ஆண்மைபற்றி'' அறைகூவல் விடுத்தார்.


இப்போது தனது ‘‘ஆசி''யை ஆருடமாக அமித்ஷாவிடமே தந்து திரும்பியுள்ளார்.


அய்யோ, பாவம்! அரசியல் புரோக்கர்கள் கதி இப்படியா ஆவது?


அந்தோ, பரிதாபம்!


Comments