ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பென்சன் திட்டம், மத்திய அரசுப் பணியில் ஓய்வு பெற்றோர்க்கு பாதகமாக உள்ளதையும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தனது தொண்டர்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் கட்டளையிட்டுள்ளார்.

  • கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் கவனம் செலுத் தாது, லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வர பாஜக ஆளும் மாநிலங் கள் முற்படுவது, பிரச்சினையை திசை திருப்பும் செயல் என பத்ரலேகா சட்டர்ஜீ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வர முயற்சிக்கும் பாஜக முயல்கிறது. இச்சட்டம் பாஜகவில் இருக்கும் சுப்ரமணியன் சாமி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோருக்கும் அவர்களின் பிள்ளை களுக்கும் பொருந்துமா என சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்திர பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • உள்துறை அமைச்சர் பதவியை வகிக்கும் அமித் ஷா, காஷ்மீரில் எதிர்க்கட்சிகளைக் கும்பல் என கூறுவது தவறு. மத்தியில் ஆளும் மோடி அரசை, விமர்சனம் செய்பவர்களை தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால் இதனை உறுதியுடன் அனைவரும் எதிர்க்க வேண்டும். மோடி அரசில் உள்ளவர்கள் தங்களது வார்த்தைகளை கவனத்துடன் கையாள வேண்டும் என எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • ஆர்.எஸ்.எஸ். இருமதத்தை சேர்ந்தவர்கள் இடையிலான திருமணத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் அந்தத் திருமணங்கள் சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்திட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஊடகத்துறையின் உறுப்பினர் ரட்டன் சார்தா கருத்து தெரிவித்துள்ளார்.

  • இட ஒதுக்கீடு சமூகத்திடையே வேற்றுமையை உருவாக்கி யுள்ளது. தகுதியும் அறிவும் மிக்கவர்களுக்கு உயர்கல்வியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


தி டெலிகிராப்:  • பீகார் அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கும் தர்கிஷோர் பிரசாத் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் தவறான வயதை தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்டுள்ளதை ஆதாரத்துடன் ஆர்.ஜே.டி. கட்சி வெளியிட்டுள்ளது.

  • காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்குப் போட்டியிடும் தங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை, பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அரசு கடத்தி வைத்துள்ளது என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.


குடந்தை கருணா


22.11.2020


Comments