மறைந்தாரே பின்னையூர் பன்னீர்செல்வம் (அய்.ஏ.எஸ். ஓய்வு) நமது ஆழ்ந்த இரங்கல்


ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் கிராமத்திலிருந்து படித்த, மாணவப் பருவம் தொட்டே திராவிட இயக்கப் பற்றாளராகவும், பெரியாரிஸ்ட் ஆக தனது எஞ்சிய வாழ்வைச் செலவழித்த கல்வியாளர் - நிர்வாக ஆளுமைத் திறன் மிக்க அருமை நண்பர் பன்னீர்செல்வம் (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி) அவர்கள் 13.11.2020 அன்று தமது கிராமத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.


இனஉணர்வு, மொழி உணர்வு மிக்க ஓர் ஆளுமையாக அவர் தனது பணிக் காலத்தில் சிறப்பாக முத்திரை பதித்தவர். நம்மிடம் மிகுந்த அன்பு கொண்ட பண்பாளர் - கொள்கையாளர்.


அவரது மறைவால் வாடும் அவரது இணையர் ஜெகதீஸ்வரி, மகன் விவேகன், மகள் கனகதாரா ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


15.11.2020


Comments