ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • தனி நபர் சுதந்திரம் பற்றி உச்ச நீதிமன்றம் சிறப்பான கருத்தினை அளித்து ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப் கோஸ்வாமிக்கு பிணை வழங்கியது. ஆனால், 83 வயது பாதிரியார் ஸ்டான் சுவாமி நீர் அருந்த ஒரு ஸ்டிரா மற்றும் காலுக்கு செருப்பு கொடுப்பது பற்றி இன்னும் 20 நாட்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். தனி நபர் சுதந்திரம் சிலருக்கு வேகமாக பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பலருக்கு சிறையில் பல காலம் காத்திருக்கும் நிலை உள்ளது என மேனாள் தூதரக அதிகாரியான, அரசியல் பிரமுகர் பவன் வர்மா தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

  • பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் நான்காவது முறையாக இன்று பதவி ஏற்க உள்ளார். சென்ற முறை துணை முதல்வராக இருந்த பாஜக தலைவர் சுசில் மோடிக்கு இம்முறை வாய்ப்பு இருக்காது என தெரிகிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை சட்டம் நிர்ணயிக்க முடியாது. லவ் ஜிகாத் என்ற பெயரில் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்க சில மாநிலங்கள் சட்டம் இயற்ற முடிவு செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் வழக்குரைஞர் எம்.ஆர்.சம்சாத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • உ.பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் பெண் பாலியல் மரணம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற கேரளத்தைச் சேர்ந்த பத்திரிக் கையாளர் காப்பான் கைது செய்யப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில், அவரது பிணை குறித்துஉச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப்பிற்கு ஒரு வாரத்தில் பிணையில் வர உச்சநீதிமன்றம் உத்தரவு அளிக்கிறது. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? என காப்பான் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


- குடந்தை கருணா


16.11.2020


Comments