ஆன்லைன் மீடியாக்களுக்கு மத்திய அரசு புது கட்டுப்பாடு

புதுடில்லி, நவ. 12- ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் மீடியாக்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட் டவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத் தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.


மத்திய அமைச்சரவை செயலகம் நேற்று (11.11.2020) வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி இயங்குதளங்கள் உள் ளிட்டவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர் பான அறிக்கையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, ஆன்லைனில் செய் திகள், வீடியோ, ஆடியோ, திரைப்படங்கள் தொடர் பான கொள்கைகளை ஒழுங்கு படுத்தும் அதிகாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கு வந்துள் ளது.


இந்த விதிகளை இந்திய அரசின் முன்னூற்று அய்ம் பத்தி ஏழாவது திருத்த விதி கள் 2020 என்று அழைக்க லாம். இவை ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வருகின்றன. இதனால் ஓடிடி தளங்கள், ஆன்லைன் செய்தி நிறுவனங் கள் உள்ளிட்டவற்றில் வரும் செய்திகள், நிகழ்ச்சிகளை இனி அரசு கண்காணிக்க, பரி சோதிக்க முடியும். ஓடிடியில் வெளியாகும் படங்கள். சென் சார் செய்யப்படுமா என்பது குறித்த விவரங்கள் வெளியாக வில்லை. எதிர்காலத்தில் சென் சார் செய்யப்படுவதற்கான முதல் படி இதுதான் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை இந்திய பத்திரிகை கவுன் சிலானது அச்சு ஊடகங்களை யும், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் செய்தி சேனல்களை யும், விளம்பர தர நிர்ணய கவுன்சிலானது விளம்பரங் களையும் கட்டுப்படுத்தி வரு கின்றது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமானது திரைப்படங்களை கண்கா ணித்து சென்சார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Comments