அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வாசிங்டன், நவ. 20- அமெரிக் காவில் கரோனா பலி எண் ணிக்கை 2,50,000-அய்க் கடந் துள்ளதாக ஜான்ஸ் ஹாப் கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அமெரிக்கா வைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல் கலைக்கழகம் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்த நிலையில் அங்கு கரோனாவினால் பலி யானவர்களின் எண்ணிக்கை யும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேத்தில் 1,707 பேர் கரோனாவுக்குப் பலி யாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரி ழந்தவர்கள் எண்ணிக்கை 2,56,254 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத் துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா வில் கரோனா வைரஸ் 2 ஆவது கட்ட அலை பரவியது போன்று, தற்போது நாள் தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக் கள் பாதிக்கப்பட்டு வருகின் றனர். அமெரிக்காவில் அதிக ரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்க ளைக் கொண்ட ஆலோ சனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதி யளித்துள்ளார்.


உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர் கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர் கள் உயிரிழந்துள்ளனர்.


Comments